அனைத்து நோய்களுக்கும் நிவாரணி தினமும் ஒரு செவ்வாழை!

0

மற்ற வாழைப்பழங்களை விட செவ்வாழையில் தான் அதிகமான சத்துக்கள் அடங்கியுள்ளது. பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் தமனிகள் தடிமனாவதைத் தடுக்கும் , உடலை இதய நோய், புற்றுநோயின் தாக்கத்திலிருந்தும்  பாதுகாக்கும்.

பீட்டா-கரோட்டீன் நமது உடலினுள் செல்லும் போது வைட்டமின் ஏ-வாக மாற்றப்பட்டு, கண்களின் ஆரோக்கியத்தையும், நோயெதிர்ப்பு சக்தியையும், சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

செவ்வாழையில் கலோரிகள் குறைவு என்பதால் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் நாளுக்கு ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் எடை குறையும்,  பசியெடுக்காது.

செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் சிறுநீரக கற்கள் உருவாகுவதை தடுக்கிறது.

மேலும் உடலில் கல்சியம் அதிகமாக உறிஞ்சப்பட்டு எலும்புகளின் ஆரோக்கியத்தை பேணும் ஆகவே நீங்கள் சிறுநீரக பிரச்சனைகள் ஏற்படாமலிருக்க தினமும் ஒரு செவ்வாழையை சாப்பிட்டு வந்தால் நன்மை தரும்.

செவ்வாழையில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இரத்தணுக்களின் அளவை அதிகாிக்கும்,

செவ்வாழை பழத்தை தொடர்ந்து ஒரு வாரம் உட்கொண்டு வர உடலில் ஏற்படும் சொறி, சிரங்கு, தோல் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு தீர்வு கிடைக்கும்.

எப்போதும் சோம்பலாய் இருப்பவர்களுக்கு இப்பழம் சிறந்த மருந்து. எப்படியெனில் செவ்வாழையில் உள்ள சர்க்கரை ஆற்றலை வழங்கி , சோர்வைத் தடுத்து, உடலை புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்புடனும் வைத்துக் கொள்கிறது.

நெஞ்செரிச்சல் பிரச்சினை உள்ளவா்கள் தினமும் செவ்வாழையை சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

மொத்தத்தில் எல்லா பிரச்சினைகளுக்கும் செவ்வாழை நல்ல தீா்வை தரும் என்பதில் ஐயமில்லை.

இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்!

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபெண்கள் முகத்தில் முடி வளர இது தான் காரணம்!
Next articleநீளமான முடி வளர்ச்சிக்கு பால் செய்யும் அற்புதங்கள்!