Home Patti Vaithiyam அடிக்கடி சூடேற்றி சாப்பிடக்கூடாத உணவுகள் !

அடிக்கடி சூடேற்றி சாப்பிடக்கூடாத உணவுகள் !

0
759

முதல் நாள் உணவை சமைத்து வைத்துவிட்டு, மறுநாள் அவற்றை சூடேற்றி சாப்பிடுவோர் இதை கண்டிப்பாக படிக்க வேண்டும்.

இன்றைய உலகில் பரபரப்பான வாழ்க்கைமுறையில் எம்மால் உணவுகளை சமைத்து சாப்பிட முடியவில்லை. இதனால் சூடேற்றி சாப்பிடக்கூடிய உணவுகளை நாடுகின்றோம்.இதனால் இன்றைய தலைமுறையினருக்கு பல்வேறுவிதமான நோய்கள் வேகமாக தாக்குகின்றன,

காலையில் எழுந்து சமைப்பதற்கு நேரம் இல்லை என்று,முதல் நாள் இரவிலேயே உணவை சமைத்து வைத்துவிட்டு, மறுநாள் அவற்றை சூடேற்றி சாப்பிடுபவா்கள் இதை கண்டிப்பாக நீங்கள் படிக்க வேண்டும். அடிக்கடி சூடேற்றி சாப்பிடக்கூடாத உணவுகளை பார்க்கலாம்.

  • உருளைக்கிழங்கு
    உருளைக்கிழங்கை ஒருமுறை சமைத்த பின்னர், மீண்டும் மீண்டும் சூடேற்றி உண்ணக்கூடாது. ஏனென்றால் இதில் உள்ள சத்துக்களானது பலமுறை சூடேற்றும் போது நச்சுமிக்கவையாக மாறிவிடும். உருளைக்கிழங்கை பொரித்து சாப்பிடுவதை விடுத்து, வேக வைத்து சாப்பிடுங்கள். இதனால் அதிலிருந்து முழு சத்தையும் பெற முடியும்.
  • சிக்கன்
    சிக்கனில் புரோட்டீன் அதிகம் உள்ளது. அத்தகைய சிக்கனை 2-3 முறைக்கு மேல் சூடேற்றி உட்கொண்டால், அதன் காரணமாக செரிமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே சிக்கனை வாங்கி சமைத்தால், தேவையான அளவு மட்டும் உபயோகித்துவிட்டு, மீதிஉள்ளதை ஃப்ரீசரில் வைத்துவிடுங்கள். தேவைப்படும் போது சமைத்து சாப்பிடுங்கள்.
  • பசலைக்கீரை
    பசலைக்கீரையில் இரும்புச்சத்தும், நைட்ரேட்டுகளும் தாரளமாக உள்ளது. இதனை பலமுறை சூடேற்றினால், அதில் உள்ள நைட்ரேட்டுகள், நைட்ரைட்டுகளாக மாற்றப்படுவதோடு, புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென்களாகவும் மாறும் தன்மை உடையது. ஆகவே இந்த கீரையை கொண்டு சமைத்த உணவுகளை பலமுறை சூடேற்ற வேண்டாம்.
  • முட்டை
    முட்டைகளில் புரோட்டீன் அதிகமாக உள்ளது. இதனை அளவுக்கு அதிகமாக வேக வைத்து சாப்பிடக்கூடாது. முட்டையை பலமுறை சூடேற்றி உட்கொண்டால், அது செரிமான மண்டலத்தை கடுமையாக பாதிக்கின்றது. ஆகவே கவனமாக இருங்கள்.
  • காளான்
    காளான்களில் காம்ப்ளக்ஸ் புரோட்டீன்கள் அதிகமாக உள்ளதால், இதனை ஒருமுறை சமைத்த பின் மீண்டும் சூடேற்றாதீர்கள். இதனால் தீவிரமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
  • சாதம்
    சாதம் ஒருமுறை சமைத்த பின் குளிா்சாதனத்திற்குள் வைத்து மீண்டும் சூடேற்றாதீர்கள், இதனால் நச்சுதன்மைமிக்கவையாக மாறிவிடும். மேலும் மரக்கறி வகைகளை மீண்டும் மீண்டும் சூடேற்றி உண்பதை தவிா்த்து கொண்டால் நன்மை தரும்.

By: Tamilpiththan

Previous articleபத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்! மிளகு பற்றி அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்!
Next articleயாரெல்லாம் கிரீன் டீ குடிக்கக் கூடாது தெரியுமா?