அதிகமாக கொழுப்பு உணவுகளை சாப்பிடுவிட்டீர்களா? உடனே இதை பருகுங்கள்!

0

உடல் பருமனாக உள்ளவர்கள் கொழுப்புகள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை இன்னும் அதிகரித்துவிடும் என்று கூறுவார்கள். அது உண்மை தான், ஆனால் அப்படி கொழுப்பு மிக்க உணவுகளை சாப்பிட்டு முடித்த பின் சில மூலிகைப் பொருட்களை நீரில் கலந்து குடித்து விட்டால், அது உடலில் கொழுப்புகள் சேர்வதை தடுத்து, உடல் எடையை அதிகரிக்க செய்யாது.

எந்த வகை கொழுப்பு உணவுகளை சாப்பிட்டாலும், உடனே வெதுவெதுப்பான நீரை குடிக்க வேண்டும். அதனால் செரிமான சக்தி அதிகரித்து, உடலில் சேரும் கொழுப்புகள் வேகமாக எரித்துவிடும்.

கொழுப்பு உணவுகளை சாப்பிட்ட பின் 1 ஸ்பூன் திரிபலா சூரணத்தை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து விட வேண்டும். அதனால் கொழுப்புள்ள உணவுகள் விரைவில் செரிமானம் அடைந்து உடலில் கொழுப்புகள் சேர்வது தடுக்கப்படும்.

வால் மிளகின் சூட்டுத்தன்மை மற்றும் காரத்தன்மையால் உடலில் சேரும் கொழுப்புகளை உடைக்கும் பண்பைக் கொண்டது. எனவே 1 ஸ்பூன் வால்மிளகுப் பொடியை மோர் அல்லது நீரில் கரைத்து குடிக்க வேண்டும்.

தேன் கிருமி நாசினி மட்டுமல்லாமல், எளிதில் செரிக்க வைக்கும் தன்மை மற்றும் கொழுப்புகளை விரைவில் கரைக்கும் தன்மையை கொண்டது. எனவே சுத்தமான தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும்.
கொழுப்புகள் மிக்க உணவுகளை சாப்பிட்ட பின் இஞ்சி தேநீர் செய்து உடனடியாக குடிக்க வேண்டும்.

அதனால் செரிமான சக்தியை அதிகரித்து, உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது கொழுப்பு உணவுகளை சாப்பிட உடனடியாக உடற்பயிற்சி செய்யக் கூடாது. ஆனால் மெதுவாக ஒரு 10 நிமிடங்கள் நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம். அதனால் அமிலங்கள் சுரப்பது வேகமாகி, அதன் மூலம் கொழுப்புகளை எரிக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉங்களுக்கு இந்த பிரச்சனைகள் இருந்தால் ஆண்களே இளநீரை இப்படி பயன்படுத்துங்கள்!
Next articleஉடலில் உள்ள நச்சு கட்டிகளை கரைக்கும் அற்புத சிவனார் வேம்பு மூலிகை!