உடலில் உள்ள கொழுப்பினை வெளியேற்றி நோய்களின்றி வாழ தினமும் வேர்க்கடலை சாப்பிடுங்கள்!

0

உங்களுக்கு தெரியுமா? 30 முதல் 80 செ.மீ. நீளம் உடைய தண்டினையும்;, மஞ்சள் நிறத்திலான பூக்களையும், எண்ணற்ற சத்துகள் கொண்டு தரையின் அடியில் வேர்ப்பகுதியில் கொத்துக் கொத்தாக காய்த்து காணப்படும் வேர்க்கடலையை தினமும் 5 முதல் 10 சாப்பிட்டு வரும் போது நீண்ட நாட்கள் நோய்களின்றி உயிர் வாழ முடியுமாம்.

இனி ஒரு கப் வேர்ககடலையில் உள்ள ஊட்டச்சத்துக்களை நோக்குவோம்.

விற்றமின் ஈ – 50%

போலேட் – 43%

கல்சியம் – 9%

இரும்புசத்து – 12%

மக்னீசியம் – 63%

பொஸ்பரஸ் – 57%

பொட்டாசியம் – 30%

சோடியம் – 19%

கொழுப்புசத்து – 63%

நார்சத்து – 54%

இவற்றை விட விட்டமின் டீ6நு, ரிபோஃப்ளேவின், தயாமின், நியாசின் மற்றும் தாது உப்புகளான இரும்புச்சத்து, மெக்னீசியம், துத்தநாகம், பொட்டாசியம், சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் டிரிப்டோபேன், அர்ஜினைன், டைரோசின் போன்ற மருத்துவப் பொருட்களும் அதிகளவில் காணப்படுகின்றது.

வேர்க்கடலையில் உள்ள மருத்துவ நன்மைகள்

சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் தமது அன்றாட உணவில் வேர்க்கடலையை சேர்த்துக் கொள்ளம் போது, அது உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை வெளியேற்றி, மாரடைப்பு வராமல் பாதுகாக்கின்றது.

வேர்க்கடலையில் உள்ள விட்டமின் B6இ ரிபோஃப்ளேவின், தயாமின், நியாசின் மற்றும் ஃபோலேட் போன்ற சத்துக்கள் மூளையின் இரத்தோட்டத்தை சீராக்கி, மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது.

வேர்க்கடலையின் தோலினை நீக்கி, அதனை நன்கு இடித்து மாவாக்கி, அதனை பாலில் வேக வைத்துச் சாப்பிட்டு வரும்போது ஆண்மை தன்மை அதிகரிக்கும்.

வேர்க்கடலையில் அதிகமாக காணப்படுகின்ற புரதச்சத்து, எமது உடலில் இறந்த செல்களை ஈடுகட்டவும், உடல் மற்றும் செல்களுக்கு புத்துணர்வு அளிக்கவும் உதவுகின்றது.

சிறுநீர் எரிச்சல், சிறுநீர்த்தாரை மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளின் போது தினமும் கடலை எண்ணெய் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பாலில் கலந்து குடித்து வருதல் நல்ல பலனைத்தரும்.

அடிபட்ட இடத்தில் ஏற்படும் இரத்த கட்டு வீக்கம், மூக்கில் ஏற்படும் இரத்தக்கசிவு மற்றும் இரத்தம் உறையும் தன்மை போன்ற பிரச்சனைகளிற்கு வேர்க்கடலையின் தோலினை மருந்தாகப் பயன்படுத்த முடியும்.

கொனேரியா எனும் பால்வினை நோயின் போது ஒரு தேக்கரண்டி கடலை எண்ணெய்யை பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வருதல் நல்ல பலனளிக்கும்.

குறிப்பு

வேர்க்கடலையை பச்சையாக சாப்பிடுவதனை விட, அதனை வறுத்து அல்லது வேகவைத்து சாப்பிட்டு வரும் போது அதனுடைய முழுமையான சத்துக்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என்று பல்வேறுபட்ட ஆய்வுகள் கூறுகின்றன.

ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள, வேர்க்கடலை அல்லது வேர்க்கடலை எண்ணெய்யை பயன்படுத்திய பினனர்; சரும எரிச்சல் போன்ற ஒவ்வாமையை உணர நேரிட்டால், உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசனி திசை இந்த 6 ராசிகாரர்களுக்கு மட்டும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்!
Next articleபெண்களுக்கு முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்க வீட்டில் உள்ள‌ உப்பு போதும்!