சனி திசை இந்த 6 ராசிகாரர்களுக்கு மட்டும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்!

0

மனிதர்களுக்கு ஏதாவது ஓரு கால கட்டத்தில் சனி தசை சனி புத்தி நடக்கும். ஒருவரது ராசியில் சனி திசை 19 வருடங்கள்.

இந்த சனி திசை நடக்கும் போது சனி இருக்கும் இடத்தை பொறுத்து சுப பலன்களோ அசுப பலன்களோ உண்டாகும். சனி புத்தி நடக்கும் போதும் சிலருக்கு உடல்நலக்குறைவு, பொருள் நஷ்டம் ஏற்படும். ஜாதகத்தில் சனி எந்த இடத்தில் இருக்கிறது என்பதைப் பொறுத்து பலன்கள் மாறுபடும்

சனி திசை யாருக்கு யோகம்
சனிபகவான் ஆயுள்காரகன் அவரை வழிபட நீண்ட ஆயுள் கிடைக்கும். ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய லக்னம் மற்றும் ராசியில் பிறந்தவர்களுக்கு சனி திசை யோகத்தை வழங்கும்.

மேஷம், சிம்மம், கடகம் லக்னகாரர்கள் சனிதசை, சனிபுத்தி காலங்களில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். சனிக்கிழமைகளில் கோவில்களுக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட பாதிப்புகள் நீங்கும்.

சனி திசையால் என்ன பாதிப்பு
சனி திசை நடக்கும் போது ஒருவரின் ஜாதகத்தில் ராசியில்,லக்கினத்தில் சனி இருந்தால் அடிக்கடி நோய்வாய்ப்படுவர். வேலையில் வேறு ஊருக்கு இடமாற்றம் உண்டாகும் வாய்ப்புண்டு. இரண்டாவது இடத்தில் சனி இருந்தால் பொருள் நஷ்டம் உண்டாகும் கண் தொடர்பான நோய்கள் ஏற்படும்.

மனக்குழப்பம்
ஜாதகத்தில் மூன்றாவது இடத்தில் சனி இருந்தால் நல்ல பலன்களே நடைபெறும். எதிர்பாராத இடத்தில் இருந்து பொருள் வரவு உண்டாகும். நான்காம் இடத்தில் சனி இருந்தால் எப்போதும் கலகமும் அதனால் மனக்குழப்பமும் ஏற்படும்.

எதிரிகள் தொல்லை நீங்கும்
ஐந்தாவது இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம். இந்த இடத்தில் சனி இருந்தால் பெற்ற பிள்ளைகளால்தான் அதிக தொந்தரவுகள் வரும்.வேலை செய்யும் இடத்தில் பிரச்சனை வரலாம். ஆறாவது இடத்தில் சனி இருந்தால் அறுவை சிகிச்சை நடக்கலாம், அதே நேரத்தில் எதிரிகள் தொல்லை நீங்கும்.

திடீர் அதிர்ஷ்டம்
எட்டாவது இடத்தில் சனி இருந்தால் உறவினர்களுக்கு கஷ்டம் வரும். ஒன்பதாவது இடத்தில் சனி இருந்தால் வெளிநாடு செல்லும் யோகம் வரும். பத்தாம் இடத்தில் சனி இருந்தால் மிக நல்லது.நல்ல வேலை,திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.

11 ல் சனி இருந்து திசை நடந்தால் சொத்து பெருகும்.நோய் நொடியில்லாத சுகமான வாழ்க்கை அமையும்.12 ல் சனி இருந்தால் வீண் அலைச்சல் வீண் விரையம் ஏற்படும். சனிதிசை, சனி புத்தி, ஏழரை சனி, அஷ்டம சனி நடைபெறும் காலங்களில் சனிபகவானுக்கு ஏற்ற யாகங்களை செய்யலாம். ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு சென்று வர பாதிப்புகள் நீங்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஒன்பது கல் கொண்ட நவரத்தின மோதிரங்கள் யார் அணிந்தால் அதிர்ஷ்டம் கொட்டும்?
Next articleஉடலில் உள்ள கொழுப்பினை வெளியேற்றி நோய்களின்றி வாழ தினமும் வேர்க்கடலை சாப்பிடுங்கள்!