விவாகரத்து கோரும் உயிருக்கு உயிராக நேசிக்கும் தம்பதி: நெஞ்சை உருக்கும் காரணம்!

0
311

அமெரிக்காவில் குழந்தையின் மருத்துவ செலவுக்காக அன்பாக வாழும் கணவன், மனைவி விவாகரத்து கோரவுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜேக் மற்றும் மரியா தம்பதிக்கு பிரிங்டன் மற்றும் பைரன் என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

பிரிங்டனுக்கு ஆறு வயதாக இருக்கும் போதே Wolf-Hirschhorn syndrome என்ற மரபணு கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதற்கான சிகிச்சைக்கு ஆண்டுக்கு $15,000-ஐ ஜேக் மற்றும் மரியா செலவிடுகிறார்கள்.

ஆனால் நிதி நெருக்கடியால் அவர்களால் தற்போது அவ்வளவு பணத்தை செலவிடமுடியவில்லை.

இதையடுத்து மனதை கல்லாக்கி கொண்டு ஒரு முடிவை அந்த தம்பதி எடுக்கவுள்ளனர்.

அதாவது அமெரிக்க சட்டபடி மருத்துவ காப்பீடு செய்பவர்கள் குடும்பமாக இருந்தால் அவர்களுக்கு ஒரு தொகை வழங்கப்படும்.

அதுவே கணவரை மனைவி பிரிந்து வேலை எதுவும் இன்றி தனியாக வாழ்ந்தால் அவருக்கு அதிகளவு காப்பீடு தொகையாக வழங்கப்படும்.

இந்த பணத்துக்காகவே அன்பாக வாழும் ஜேக் மற்றும் மரியா விவாகரத்து செய்ய நினைக்கிறார்கள்.

அந்த பணத்தை வைத்து தங்கள் மகள் பிரிங்டனுக்கு நல்ல சிகிச்சையளிக்க விரும்புகிறார்கள்.

மகளின் வாழ்க்கை சிறப்பாக இருக்க எந்தவொரு தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறோம் என மனம் உருக ஜேக்கும், மரியாவும் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: