இலங்கையில் மூன்றாவது சர்வதேச விமான நிலையம்!

0

இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையம் ஹிங்குராகொட பகுதியில் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி திட்டம் தொடர்பான கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி திட்டத்திற்கு சமாந்தரமாக இந்த சர்வதேச விமான நிலையம் அமையவுள்ளது.

2050ஆம் ஆண்டளவில் இலங்கையின் கிழக்கு ஜன்னலாக (பலகனியாக) திருகோணமலையை அபிவிருத்தி செய்யவும் இதன்போது திட்டமிடப்பட்டுள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு அடுத்ததாக ஹிங்குராகொட பகுதியில் அமைக்கப்படவுள்ள புதிய சர்வதேச விமான நிலையம் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleயார் அந்த 19 பேர்? மரண தண்டனை விதிக்கப்படவுள்ளவர்களின் பெயர் பட்டியல் தயார்!
Next articleவிவாகரத்து கோரும் உயிருக்கு உயிராக நேசிக்கும் தம்பதி: நெஞ்சை உருக்கும் காரணம்!