ஒரு குழந்தையைப் பார்த்ததும்! வா(டகைத்) தாய் மூலம் குழந்தை பெற்ற தம்பதி!

0
10251

ஒரு குழந்தையைப் பார்த்ததும்! ஏராளமான பணம் செலவு செய்து வா(டகைத்தாய்) மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட ஒரு தம்பதி, குழந்தையைப் பார்த்ததும், அது தங்களுக்கு வேண்டாம் என மருத்துவமனையிலிருந்து நடையைக் கட்டினர்.

மூன்று முறை கருச்சிதைவு ஏற்பட்டு, கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகளாலும் அவதியுற்ற ஒரு பெண்ணின் கணவர் வா-டகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் யோசனையை மனைவிக்கு கூற, அவரும் சம்மதித்திருக்கிறார்.

எனவே கணவனின் உயிரணு, மனைவியின் கரு முட்டை இரண்டையும் சேகரித்து, மருத்துவமனை ஒன்றில் செயற்கை முறையில் கருவுறச் செய்து, வா-டகைத்தாய் ஒருவரின் கர்ப்பப்பையில் அந்த கரு வைக்கப்பட்டது.

பத்து மாதங்களாக அந்த வா-டகைத்தாய்க்காக ஏராளம் செலவு செய்த தம்பதியினர், குழந்தை பிறக்கும் நாளுக்காக ஆவலுடன் காத்திருந்தனர்.

குழந்தையும் பிறந்தது, குழந்தையைப் பார்க்கச் சென்ற தம்பதியினர் தொட்டிலில் கிடத்தியிருந்த குழந்தையைக் கண்டதும் அதிர்ச்சியில் வாய் பிளந்தனர்.

தொட்டிலில் தலை நிறைய கருப்பு முடியுடன், பழுப்பு நிறக்கண்களுடனும் ஒரு குழந்தை படுத்திருந்தது.

அது ஒரு ஆசியக் குழந்தை என அதன் முகத்திலேயே எழுதி வைத்திருந்தது.

அந்த தம்பதியினர் அதிர்ச்சியடையக் காரணம் என்னவென்றால், அவர்கள் இருவருமே, நீல நிறக் கண்களையும், பழுப்பு நிற முடியையும் கொண்ட அமெரிக்கர்கள்!

அதிர்ந்துபோன அந்த ஆண், உடனடியாக மருத்துவர்களை அழைத்து புகாரளித்ததோடு, DNA சோதனையையும் மேற்கொண்டார்.

DNA சோதனையின் முடிவுகள் அவர் எதிர்பார்த்துபோலவே அதிர்ச்சியளிப்பவையாகத்தான் இருந்தன.

ஆம்! அவர் அந்த குழந்தையின் தந்தை இல்லை.

எங்களுக்கு அது ஆசியக் குழந்தை என்பதில் பிரச்சினை இல்லை என்று கூறும் அவர், அது எங்கள் இருவரின் குழந்தையுமே இல்லை என்பதுதான் பிரச்சினை என்கிறார்.

மருத்துவமனையில் நடந்த குழப்பத்தினால், யாரோ ஒருவரின் உயிரணுவும் கருமுட்டையும் கருவுறச்செய்யப்பட்டு, இந்த தம்பதியினர் ஏற்பாடு செய்திருந்த வா-டகைத்தாயின் கர்ப்பப்பையில் வைக்கப்பட்டிருக்கிறது.

தம்பதியினர், குழந்தையை வாங்கிக் கொள்ளாமலே மருத்துவமனையிலிருந்து வெளியேற, தனது ஏமாற்றத்தை சமூக ஊடகம் ஒன்றில் வெளிப்படுத்தினார் அந்த தந்தை.

சுமார் 4,000 பேர் அந்த இடுகைக்கு கருத்து தெரிவித்துள்ள நிலையில், மருத்துவமனை தவறு செய்து விட்டது என்பதற்காக, ஒரு ஆணாக நானும் வருந்துகிறேன், என்றாலும், நானும் என் மனைவியும் நீண்ட காலமாக ஆசைப்பட்ட ஒரு விடயம் கண் முன் இருக்கும் நிலையில், நான் அந்த வாய்ப்பை வீணாக்க மாட்டேன் என்று ஒருவரும், நீங்கள் இந்த குழந்தையை உலகுக்கு அழைத்து வந்திருக்கிறீர்கள், அதை கவனிக்கும் பொறுப்பு உங்களுடையதுதான் என்று ஒருவரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த நாட்டு மருந்தை தினமும் இருவேளை எடுத்தால் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் குறையும் தெரியுமா.
Next articleவிறகு சேகரிக்க சென்ற நபருக்கு சிக்கிய வினோத கடிதம்!