இந்த நாட்டு மருந்தை தினமும் இருவேளை எடுத்தால் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் குறையும் தெரியுமா.

0

இன்றைய நவீன காலத்தில் உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனையால் ஏராளமானோர் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்சனைகளுக்கு பணத்தை செலவழித்து கடைகளில் விற்கப்படும் மருந்தை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, இயற்கை வைத்தியத்தை மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

அந்த வகையில் அமிஷ் மக்கள் தங்களுக்கு ஏற்படும் எந்த ஒரு உடல்நல பிரச்சனைகளுக்கும் அவர்களது பாரம்பரிய வைத்தியத்தை தான் இன்று வரை பின்பற்றி வருகின்றனர். அப்படி உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகளுக்கு அவர்கள் பாரம்பரிய மருந்து ஒன்றை தயார் செய்து எடுப்பார்கள்.

முக்கியமாக இந்த மருந்தானது வீட்டுச் சமையலறையில் இருக்கும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதாகும்.

சரி, இப்போது அந்த மருந்து குறித்து காண்போம்.

தேவையான பொருட்கள்:

இஞ்சி – 1 துண்டு (துருவியது)பூண்டு – 1 (துருவியது)ஆப்பிள் சீடர் வினிகர் – 1 டேபிள் ஸ்பூன்தேன் – 1 டீஸ்பூன்எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு 30 நொடிகள் அரைக்கவும். பின் அதனை ஒரு டப்பாவில் போட்டு 5 நாட்கள் ஃப்ரிட்ஜில் வைத்து, பின் உட்கொள்ளவும்.

எப்படி பயன்படுத்துவது?

இந்த மருந்தை தினமும் இருவேளை எடுக்க வேண்டும். அதிலும் காலையில் எழுந்தும் வெறும் வயிற்றில் 1 டேபிள் ஸ்பூன் மற்றும் இரவு உணவு உண்பதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் 1 டேபிள் ஸ்பூன் என உட்கொள்ள வேண்டும்.

இச்செயலை தொடர்ந்து மூன்று நாட்கள் பின்பற்றி வந்தால், உடல் நன்கு புத்துணர்ச்சியுடனும், ஆற்றலுடனும் இருப்பது போன்று உணர்வதோடு, உங்களது உயர் இரத்த அழுத்தமும், உயர் கொலஸ்ட்ராலும் குறைந்திருப்பதை நன்கு காணலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉங்க நட்சத்திரத்தின் படி உங்களுக்குள் ஒளிந்திருக்கும் அதிசய சக்தி என்ன தெரியுமா!
Next articleஒரு குழந்தையைப் பார்த்ததும்! வா(டகைத்) தாய் மூலம் குழந்தை பெற்ற தம்பதி!