உடல் வலி மற்றும் வாத வலிகளை நீங்கும் மூலிகை மருத்துவம்! பூரண குணம் கிடைக்க செய்முறை குறிப்புகள் !

0
1211

அறிகுறிகள்:
உடல் வலி,
வாத வலி.

தேவையானவை:
கருநொச்சி இலை.

செய்முறை:
கருநொச்சி இலைகளை சுடுதண்ணீரில் போட்டு குளித்து வர உடல் வலி மற்றும் வாத வலி நீங்கும்.

அறிகுறிகள்:
வாத‌ நோய்.

தேவையானவை:
வாதநாராயணன்,
பூண்டு,
பரட்டைக் கீரை,
முடக்கத்தான் கீரை.

செய்முறை:
பரட்டைக் கீரை, முடக்கத்தான் கீரை, வாதநாராயணன் கீரை மூன்றையும் சிறிது பூண்டு சேர்த்து நன்றாக அரைத்துச் சாப்பிட்டால் வாதத்தினால் ஏற்படும் வலிகள் குறையும்.

அறிகுறிகள்:
வாதவலி.

தேவையானவை:
சரக்கொன்றை இலை.

செய்முறை:
சரக்கொன்றை இலைகளை நன்றாக அரைத்து வாத வலியின் மேல் தொடர்ந்து பூசி வந்தால் கீழ் வாதத்தால் ஏற்படும் வலி குறையும்.

அறிகுறிகள் :
வாத வலி,
வாத வீக்கம்.

தேவையானவை:
சுக்கு,
வேலிப்பருத்தி இலை,
பெருங்காயம்.

செய்முறை :
வேலிப்பருத்தி இலைச்சாற்றுடன் சுக்கு மற்றும் பெருங்காயத்தை பொடித்து காய்ச்சி இளஞ்சூட்டில் பற்றிட்டு வந்தால் வாத வலி, வீக்கம் குறையும்.

அறிகுறிகள்:
கை,கால் இழுத்து வைத்தல்,
கை,கால் வலி.

தேவையானவை:
சதாவேலி இலை.

செய்முறை:
சதாவேலி இலைகளை அரைத்து வாத வலி ஏற்பட்ட இடத்தில் பூசி வந்தால் வாத வலி குறையும்.

அறிகுறிகள்:
மூட்டு வலிகால் வலி

தேவையானவை:
ஆகாசகருடன் கிழங்கு,
வெங்காயம்,
விளக்கெண்ணெய்,
சீரகம்.

செய்முறை :
100 கிராம் ஆகாச கருடன் கிழங்குடன், 50 கிராம் வெங்காயம், 20 கிராம் சீரகம் சேர்த்து நன்றாக அரைத்து விளக்கெண்ணெயை விட்டு வதக்கி இளஞ்சூட்டில் வாதத்துக்குப் பற்று போட்டு வந்தால் வாத வலி குறையும்.

அறிகுறிகள்: மூட்டு வலி,
கால் வலி,
கை கால் இழுத்து வைத்தல்.

தேவையானவை:
ஆடாதோடை வேரு,
தேன்,
கண்டங்கத்திரி வேர்

செய்முறை:
ஆடாதோடை வேருடன் கண்டங்கத்திரி வேர் சம அளவு சேர்த்து இடித்து அரித்து 1/2 முதல் 1 கிராம் வரை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் வாத வலி குறையும்.

அறிகுறிகள்:
கை கால் செயலிழந்தல்,
கை கால் இழுத்து வைத்தல்.

தேவையானவை:
சிற்றரத்தை.
நல்லெண்ணெய்.

செய்முறை:
100 கிராம் சிற்றரத்தையை நன்றாக காய வைத்து பொடியாக்கி அந்தப் பொடியை 400 கிராம் நல்லெண்ணெயில் கலந்து ஊறவைத்து மறுநாள் 600 லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்றாக வற்றும் வரை காய்ச்சி வடித்து அந்ந தைலத்தை வாத வலி உள்ள இடத்தில் தடவி வந்தால் வாத வலி குறையும்.

அறிகுறிகள்:
மூட்டு வலி,
கை,கால் வலி.

தேவையானவை:
ஊமத்தை இலை,
நல்லெண்ணெய்.

செய்முறை :
ஊமத்தை இலையை நல்லெண்ணெயில் வதக்கி கட்டி வர வாத வலி குறையும்.

அறிகுறிகள்:
மூட்டு வலி,
கால் வலி.

தேவையானவை:
புங்க மரம்.

செய்முறை :
புங்க மரத்தின் வேரை அரைத்து வாதத்தின் மீது தினமும் காலை மற்றும் மாலை இரண்டு வேலையும் தடவி வந்தால் வாத வலி குறையும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவாத நோய்களால் அவதிப்படுகிறீர்களா? வாத வலி மூட்டு வலி என்பவற்றை குணப்படுத்த சித்தமருத்துவம் !
Next articleகாதுவலி, தலைவலி, தலைசுற்றல், மூட்டுவலி போன்ற பல்வேறு நோய்களில் இருந்து நிவாரணம் தரும் வாத நாசக முத்திரை!