யாழ் கோப்­பா­ய் பகுதியில் குடும்பப் பெண்ணிற்கு அதிகாலையில் காத்திருந்த பேரதிர்ச்சி!

0
307

வாழைத் தோட்­டத்­துக்கு நீர் இறைப்­ப­தற்­காக மோட்­ட­ருக்­குப் பொருத்­தப்­பட்­டி­ருந்த மின்­சார வய­ரைத் தொட்ட பெண், மின்­சா­ரம் தாக்கி பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­தார்.

கோப்­பாய் மத்­தி­யைச் சேர்ந்த தவ­ராசா செப­ராணி (வயது-56) என்­ப­வரே உயி­ரி­ழந்­த­வ­ரா­வார்.

நீர் இறைப்­புக்­காக வாழைத் தோட்­டத்­தி­னுள் மின்­சார வயர் இணைப்பு உள்­ளது. மின்­சார வயர் தொய்­வ­டை­யா­மல் இருப்­ப­தற்­காக அத­னு­டன் இணைந்து கட்­டுக்­கம்பி உள்­ளது.

மின்­வ­யர் பழு­த­டைந்து, கட்­டு­கம்­பி­யு­டன் தொடு­கை­யில் இருந்­துள்­ளது. இதனை அறி­யாத பெண், மின்­சார வய­ரைத் தொட்­டுள்­ளார்.

அத­னு­டன் இணைக்­கப்­பட்ட கட்­டுக்­கம்­பி­யில் பாய்ந்த மின்­சா­ரத்­தி­னால் அவர் தாக்­கப்­பட்டு உயி­ரி­ழந்­துள்­ள­தாக இறப்பு விசா­ர­ணை­யின்­போது தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: