மூட்டு வலியை, சர்க்கரை வியாதி மற்றும் கொலஸ்ட்ரால் விரைவில் குணமாகும் ‘சோளக் கருது நாரில்’ தேநீர் தயாரிக்கும் முறை!

0
840

மூட்டு வலியை, சர்க்கரை வியாதி மற்றும் கொலஸ்ட்ரால் விரைவில் குணமாகும் ‘சோளக் கருது நாரில்’ தேநீர் தயாரிக்கும் முறை!

செய்முறை

முதலில் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் சோளக் கருது நாரை சேர்க்க வேண்டும் நன்றாக சில நிமிடங்கள் கொதிக்க விட்டு அதன் சத்துக்கள் இறங்கும் வரை விடவும் நன்றாக தண்ணீர் ப்ரவுன் கலருக்கு மாறியதும் தண்ணீரை மட்டும் வடிகட்டி கொள்ளவும் அதனுடன் தேவைப்பட்டால் டேஸ்ட்டுக்கு லெமன் ஜூஸ் சேர்த்து கொள்ளவும். கெளட் என்பது ஒரு மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனை ஆகும். அதிக அளவு யூரிக் அமிலம் மூட்டுகளில் தங்கும் போது அதிகமான வலி ஏற்படும். இதற்கு சோளக் கருது நாரில் தேநீர் தயாரித்து ஒரு நாளைக்கு இரண்டு முறை என்று குடித்து வந்தால் கெளட் வலி படிப்படியாக குறைந்து விடும்.

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் மற்றும் உடல் பருமன் உள்ளவர்கள் இதை சாப்பிட்டால் பல பிரச்சனைகளிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம். ஏனெனில் இது இன்சுலின் ஹார்மோனை தூண்டச் செய்து, சர்க்கரையின் அளவை ரத்தத்தில் அதிகரிக்காமல் தடுக்கிறது.

சோளக்கருதின் நாரில் ஒருவித ரசாயனம் இருப்பதால், இது நமது உடம்பின் சிறுநீரை அதிகப்படுத்தி, காயம் மற்றும் வீக்கங்களை குறைக்கிறது.

சோளநாரில் அதிகமாக விட்டமின் K அதிகமாக உள்ளதால், நமது உடம்பில் ஏற்படும் காயங்களின் ரத்தப் போக்கை கட்டுப்படுத்தி, ரத்தத்தை உறையச் செய்கிறது.

சிறுநீரகத்தில் ஏற்படும் கற்களை கரைக்க சோள நார் உதவுகிறது. மேலும் இது மாதிரியான சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கிறது.

இது உடலுக்கு தேவையான விட்டமின் சி சத்தை கொடுக்கிறது. இதனால் உள்ளுறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் அதிகரித்து அவைகள் நன்றாக செயல்பட உதவுகிறது. மேலும் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.

நமது உடலில் உண்டாகும் அதிகப்படியான கொலஸ்ட்ரால் பிரச்சனையை இந்த சோள நார் ஒழுங்குபடுத்தி, அந்த கொலஸ்ட்ராலை கல்லீரலுக்கு அனுப்பி ஜீரணமாக்குகிறது.

2 கப் நீரில் 2 ஸ்பூன் சோளக்கருது நாரை கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி, பின் அதனை குடித்து வந்தால் இதய பிரச்சனைகள் ஏற்படாது. சோள நாரில் புரோட்டின், மினரல், கார்போஹைட்ரேட் மற்றும் நார்சத்து போன்றவை அதிகமாக உள்ளது.

இப்போது சோளக் கருது நாரில் ஏராளமான நன்மைகள் பொதிந்துள்ளன என்பது உங்களுக்கு தெரியும். எனவே இது தெரிந்த பிறகு அந்த நாரை குப்பையில் வீச மாட்டீர்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவயிறு வீக்கம், கருப்பை நீர்க்கட்டி, முடி வளர்ச்சி, இளநரை மற்றும் நச்சுக்களை முறிக்க தும்மட்டி பழங்களை இப்படி சாப்பிடுங்க!
Next articleஅதிர்ச்சியில் வாய் பிளக்கும் ரசிகர்கள்!வாழ்வு கொடுத்த நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க மறுத்த ஜோதிகா!