முட்டையை ஃபிரிட்ஜில் வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா! ஜப்பானியர்களின் ரகசியம்! குளிர் சாதன பெட்டியில் எத்தனை நாட்கள் வைக்கலாம்!

0
1327

நமது வீட்டின் முதன்மையான மின் சாதனங்களில் குளிர் சாதன பெட்டியும் அடங்கும். காய்கறிகள், பழங்கள், உணவு பொருட்கள், ஸ்னாக்ஸ்கள் இப்படி பல வகையான பொருட்களை நாம் குளிர் சாதன பெட்டியில் தான் வைக்கின்றோம்.

ஆனால், குளிர் சாதன பெட்டியில் வைக்க கூடாத பலவகையான பொருட்களும் இருக்கின்றன.

உதாரணத்துக்கு தக்காளி, உருளை கிழங்கு, வெங்காயம், பூண்டு போன்றவை இந்த வரிசையில் அடங்கும். இதில் மிக முக்கியமான இடத்தில் வரக்கூடிய ஒன்றும் உள்ளது. அதுதான் முட்டை.

இந்த விடயம் தெரியாமல் தமிழர்கள் பல நாட்களாக ஆரோக்கியம் என்று குளிர் சாதன பெட்டியில் வைத்து பாதுக்காக்கின்றனர். ஆனால் ஜப்பானியர்கள் முட்டையை குளிர் சாதன பெட்டியில் வைப்பது கிடையாது.

முட்டையை குளிர் சாதன பெட்டியில் வைக்கலாமா..? கூடாதா..? என்பதை பற்றி நாம் அறியாமலே குளிர் சாதன பெட்டியில் வைத்து கொள்கிறோம்.

குளிர் சாதன பெட்டியில் முட்டையை வைக்கலாமா?

குளிர் சாதன பெட்டியில் நாம் உண்ணும் உணவு பொருட்களில் முக்கால் வாசியை இதனுள் திணித்து விடுவோம். இந்த வரிசையில் முட்டையும் அடங்கும். முட்டையை ஏன் குளிர் சாதன பெட்டியில் வைக்க கூடாது என சொல்கிறார்கள் என்றால், அதற்கு காரணம் சால்மோனெல்லா (Salmonella) என்கிற பாக்டீரியா தான்.

இந்த சால்மோனெல்லா என்கிற பாக்டீரியா விலங்குகளின் குடலில் வாழ கூடிய ஒரு வகை நல்ல பாக்டீரியா. ஆனால், இது விலங்குகளின் உடலை விட்டு வெளியே வந்து விட்டால், மனிதனுக்கு தீங்கை விளைவிக்கும். இவை முட்டையின் மேல் ஓட்டிலும், உட்பகுதியில் இருக்கிறதாம்.

முட்டையை குளிர் சாதன பெட்டியில் வைத்தால் அந்த பாக்டீரியாவை அப்படியே தான் இருக்க போகிறது. முட்டையை வெளியில் வைத்தாலும் இந்த பாக்டீரியா அதில் இருக்கும். நாம் குளிர் சாதன பெட்டியில் முட்டையை வைப்பதை நிர்ணயிப்பதே இந்த பாக்டீரியா தான்.

அமெரிக்கர்களின் முறை

அமெரிக்கர்கள் இந்த முட்டையை குளிர் சாதன பெட்டியில் வைத்து தான் பராமரிப்பார்களாம். முட்டையை ஃபிரிட்ஜில் வைப்பதால் முட்டை கெட்டு போகாமல் தடுக்கலாம் என இவர்கள் நம்புகிறார்கள். குளிர் சாதன பெட்டியில் முட்டையை வைப்பதால் பாக்டீரியா அதனுள் செல்லாமல் இருக்குமே தவிர இறந்து விடாது.

ஜப்பானியர்களின் ரகசியம்

அமெரிக்கர்கள் குளிர் சாதன பெட்டியில் முட்டையை வைப்பதை போன்று ஐரோப்பர்கள் வைப்பத்திலை. இவர்கள் வெளியே முட்டையை வைத்து பயன்படுத்துகின்றனர். இவர்கள் முட்டையை பெறும் முன் பல வகையில் தூய்மையாக வைத்து கொள்ள செய்கின்றனர்.

அவர்களின் ஆரோக்கியத்தில் இது முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனை தமிழர்கள் பின்பற்றுவது குறைவு.

அப்போ என்னதான் செய்யணும்?

குளிர் சாதன பெட்டியில் முட்டையை வைப்பதால் முட்டை நீண்ட நாட்கள் கெடமல் இருக்குமே தவிர அதில் உள்ள பாக்டீரியா சாகாது. எனவே, முட்டையை உள்ளே வைத்தாலும் வெளியே வைத்தாலும் அதில் உள்ள பாக்டீரியா தான் முக்கிய பங்காக விளங்குகிறது.

முட்டை அதிக நாட்கள் கெடாமல் இருக்க வேண்டும் என்றால் மட்டுமே குளிர் சாதன பெட்டியில் வைத்து கொள்ளலாம். எதுவாக இருந்தாலும் முட்டையை நாம் வேக வைத்தோ, பொறித்தோ சாப்பிடும் போது அந்த சூட்டில் சல்மோனேல்லா பாக்டீரியா இறந்து விடும்.

நாட்கள் கணக்கு

குளிர் சாதன பெட்டியில் முட்டையை வைத்து பயன்படுத்தினால் 7 முதல் 10 நாட்கள் கெடாமல் இருக்கும். இதுவே வெளியில் வைத்து அப்படியே பயன்படுத்தினால் 3 முதல் 4 நாட்கள் கெடாமல் இருக்கும்.

இது குளிர் காலத்திற்கான கணக்காகும். இது கோடை காலத்தில் சற்றே மாறுபடும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: