மகா சிவராத்திரியாகிய இன்று நீங்கள் இப்படி தான் விரதம் இருந்து வழிபாடு செய்ய‌ வேண்டும்! மகா சிவராத்திரி தினத்தில் இவற்றை அவசியம் செய்ய வேண்டும்!

0
191

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்தாண்டு மகா சிவராத்திரி சதுர்த்தசி திதி 2021 மார்ச் 11 அன்று பிற்பகல் 02:39 தொடங்கி மார்ச் 12ம் தேதி பிற்பகல் 03:02 மணிக்கு முடிவடைகிறது

இந்த அற்புத நாளில் விரதமிருந்து நான்கு ஜாமங்களில் அபிஷேக, அலங்காரம், பூஜை செய்து வழிபடுவது வழக்கம்

அந்தவகையில் சிவராத்திரி தினத்தில் எப்படி விரதம் இருந்தால் சிவனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பதை இங்கு பார்ப்போம்.

வீட்டை நன்றாக சுத்தப்படுத்தி வைக்கவும். காலையிலேயே குளித்து சுத்தமாக இருந்து நெற்றி நிறைய திருநீறு தரித்துக் கொண்டு வீட்டில் உள்ள பூஜை அறையில் தீபம் ஏற்றி வழிபடவும்.

வழிபடும் போது சிவனின் பஞ்சாட்சர மந்திரமான ‘ஓம் நமசிவாய’ என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே பூஜை செய்யவும்.

காலையில் வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்யும் போது இரண்டு வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, ஒரு டம்ளர் பால் நைவேத்தியமாகா வைத்து வழிபடவும்.

மகாசிவராத்திரி தினத்தில் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் உண்ணாமல் இருந்து இரவில் கண் விழித்து சிவ பெருமானை வழிபட்டு நான்கு ஜாம பூஜைகள் செய்து வழிபட வேண்டும்.

உடல் நல பிரச்னைகள் உள்ளது முழு நாளும் உணவு அருந்தாமல் இருக்க முடியாது என்பவர்கள் அவல், பழச்சாறு, பழங்களைச் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். தண்ணீர் அருந்தலாம்.

சிவ ராத்திரி தினத்தில் வீட்டில் இறைவனுக்கு பூஜை செய்வதோடு, இரவில் சிவாலங்களுக்கு சென்று அங்கு நடக்கும் நான்கு ஜாம பூஜைகள் தரிசித்து செய்து வழிபட வேண்டும்.

மகா சிவராத்திரி தினத்தில் குறைந்தபட்சம் ஒரு வில்வ இலையாவது சிவபெருமானுக்கு அர்சித்து வழிபட வேண்டும். இதனால் முன் வினைகள், பிறவி பாவங்களை அறுக்கும் வல்லமை உள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: