March 12 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil March 12

0

Today Special Historical Events In Tamil | 12-03 March 12

March 12 Today Special | March 12 What Happened Today In History. March 12 Today Whose Birthday (born) | March-12th Important Famous Deaths In History On This Day 12/03 | Today Events In History March-12th | Today Important Incident In History | பங்குனி 12 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 12-03 | பங்குனி மாதம் 12ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 12.03 Varalatril Indru Nadanthathu Enna.

March 12
March 12

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 12-03

  • 2009ல் எல்லைகளற்ற செய்தியாளர்கள், பன்னாட்டு மன்னிப்பு அவை ஆகியவற்றால் கோரப்பட்ட காரணத்தால் மின்வெளித் தணிக்கைக்கு எதிரான உலக நாள் கொண்டாடப்படுகிறது.
  • சீனா, தைவான், மாக்கடோனியக் குடியரசு ஆகிய நாடுகளில் மர நாள் கொண்டாடப்படுகிறது.

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 12-03 March 12

  • 1622ல் கத்தோலிக்க திருச்சபையானது லொயோலா இஞ்ஞாசி, பிரான்சிஸ் சவேரியார் ஆகியோரை புனிதர்களாக அறிவித்தது.
  • 1870ல் சூயசு கால்வாய் வழியே முதல் தடவையாக இலங்கையில் இருந்து ஐரோப்பாவிற்கு கோப்பி ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்டது.
  • 1879ல் சூலுக்களினால் சுற்றிவளைக்கப்பட்டு நூற்றுக்கும் அதிகமான ஆங்கிலப் படைகள் படுகொலை செய்யப்பட்டனர்.
  • 1894ல் கொக்கா-கோலா மென்பானம் முதற் தடவையாக கண்ணாடிப் புட்டியில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது.
  • 1913ல் ஆத்திரேலியாவில் அதிகாரபூர்வமாக வருங்கால தலைநகர் கான்பரா எனப் பெயரிடப்பட்டது. கான்பரா அமைக்கப்படும் வரையில் அதாவது 1927 வரையில் மெல்பேர்ண் தற்காலிகத் தலைநகரமாக‌ இருந்தது.
  • 1918ல் 215 ஆண்டுகளாக உருசியாவின் தலைநகராக இருந்த சென் பீட்டர்ஸ்பேர்க் தலைநகர் அந்தஸ்து மாற்றப்பட்டு மாஸ்கோ தலைநகராக்கப்பட்டது.
  • 1922ல் ஆர்மீனியா, சியார்சியா, அசர்பைஜான் ஆகிய நாடுகள் திரான்சுகாக்கேசிய சோசலிச சோவியத் குடியரசு என்ற பெயரில் இணைந்தன.
  • 1928ல் கலிபோர்னியாவில் சென் பிரான்சிசு அணைக்கட்டு உடைந்ததில் 431 பேர் உயிரிழந்தனர்.
  • 1930ல் மகாத்மா காந்தி பிரித்தானிய ஆட்சியாளரின் உப்பு ஆதிக்கத்துக்கு எதிராக 200 மைல் நீள தண்டி யாத்திரையை ஆரம்பித்தார்.
  • 1934ல் எசுத்தோனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட்டன.
  • 1938ல் செருமானியப் படைகள் ஆஸ்திரியாவை ஆக்கிரமித்து அடுத்த நாள் இணைப்பு அறிவிக்கப்பட்டது.
  • 1940ல் பனிக்காலப் போர் நடைபெற்றது. பின்லாந்து மாஸ்கோவுடன் அமைதி உடன்பாட்டிற்கு வந்தது. கரேலியாப் பகுதி முழுவதும் சோவியத் ஒன்றியம் பெற்றுக் கொண்டது. பின்லாந்துப் படைகளும் மீதமிருந்த மக்களும் உடனடியாக வெளியேறினர்.
  • 1942ல் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றதுடன் பசிபிக் போர் நடைபெற்றது. சாவகத்தில் இடம்பெற்ற சமரில் அமெரிக்க-பிரித்தானிய-ஆத்திரேலிய கூட்டுப் படை பண்டுங் என்ற இடத்தில் ஜ‌ப்பானிடம் சரணடைந்தது.
  • 1943ல் கிரேக்கம் மீதான இத்தாலிய ஆக்கிரமிப்பில் இத்தாலியப் படைகள் கார்திசுத்தா நகரைக் கைவிட்டு வெளியேறியதுடன் இத்தாலியப் படைகள் சரித்சானி நகரை சூறையாடி 360 வீடுகளை எரித்ததுடன் 40 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
  • 1950 வேல்சில் வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 80 பேர் உயிரிழந்தனர்.
  • 1954ல் இந்திய அரசினால் சாகித்ய அகாதெமி தொடங்கப்பட்டது.
  • 1967ல் இந்தோனேசியாவின் சுகார்த்தோ அரசுத்தலைவரானார்.
  • 1968ல் பிரித்தானியாவிடம் இருந்து மொரிசியசு விடுதலை பெற்றது.
  • 1992ல் பொதுநலவாய அமைப்பினுள் மொரிசியசு குடியரசானது.
  • 1993ல் வட கொரியா அணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகவிருப்பதாக அறிவித்தது.
  • 1993ல் மும்பையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1999ல் முன்னாள் வார்சா ஒப்பந்த நாடுகள் செக் குடியரசு, அங்கேரி, போலந்து ஆகியன நேட்டோவில் இணைந்தன.
  • 2003ல் பெல்கிறேட் நகரில் செர்பியாவின் பிரதமர் சொரான் தின்திச் கொல்லப்பட்டார்.
  • 2003ல் சார்சு தொற்றுநோய் குறித்த உலகளாவிய எச்சரிக்கையை உலக சுகாதார அமைப்பு அதிகாரபூர்வமாக விடுத்தது.
  • 2006ல் தென்னாபிரிக்கா ஒரு நாள் பன்னாட்டுத் துடுப்பாட்டமொன்றில் 438/9 ஓட்டங்களைப் பெற்று ஆஸ்திரேலியாவை (434) வென்று சாதனை படைத்தது.
  • 2007ல் 2000 ஏக்கர்களுக்கு மேற்பட்ட நிலப்பரப்பு கலிபோர்னியாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத்தீயினால் எரிந்து நாசமடைந்தன.
  • 2011ல் புக்குசிமா டா இச்சி அணு உலை ஜ‌ப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து வெடித்தது.
  • 2014ல் நியூயார்க்கில் ஏற்பட்ட வாயு வெடிப்பில் 8 பேர் உயிரிழந்ததுடன் 70 பேர் காயமடைந்தனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 12-03 March 12

  • 1685ல் ஐரிய ஆயர்ரும் மெய்யியலாளருமான ஜியார்ஜ் பெர்க்லி பிறந்த நாள் (இறப்பு 1753)
  • 1824ல் உருசிய-செருமானிய இயற்பியலாளரான குசுத்தாவ் கிர்க்காஃப் பிறந்த நாள் (இறப்பு 1887)
  • 1835ல் கனடிய-அமெரிக்க வானியலாளரும் கனிதவியலாளருமான‌ சைமன் நியூகோம்பு பிறந்த நாள் (இறப்பு 1909)
  • 1863ல் உருசிய கனிமவியலாளரும் வேதியியலாளருமான‌ விளாதிமிர் வெர்னாத்ஸ்கி பிறந்த நாள் (இறப்பு 1945)
  • 1889ல் லிபியாவின் இத்ரிசு பிறந்த நாள் (இறப்பு 1983)
  • 1907ல் தமிழகத் தமிழறிஞரும் வரலாற்றாளருமான‌ மா. இராசமாணிக்கனார் பிறந்த நாள் (இறப்பு 1967)
  • 1907ல் அமெரிக்க வானியலாளரான தோரித் கோப்லீட் பிறந்த நாள் (இறப்பு 2007)
  • 1913ல் இந்திய அரசியல்வாதியான ஒய். பி. சவாண் பிறந்த நாள் (இறப்பு 1984)
  • 1922ல் மலேசியாவின் இரண்டாவது பிரதமரான அப்துல் ரசாக் உசேன் பிறந்த நாள் (இறப்பு 1976)
  • 1928ல் அமெரிக்க நாடக ஆசிரியரான எட்வர்ட் ஆல்பீ பிறந்த நாள் (இறப்பு 2016)
  • 1945ல் இந்தியக் கணிதவியலாளரான விஜய் குமார் பட்டோடி பிறந்த நாள் (இறப்பு 1976)
  • 1947ல் அமெரிக்கத் தொழிலதிபரும் அரசியல்வாதியுமான மிட் ராம்னி பிறந்த நாள்
  • 1949ல் அமெரிக்க இயக்குநரான ரோப் கோஹன் பிறந்த நாள்
  • 1953ல் நேபாள அரசியல்வாதியான‌ பிரதமர்மாதவ் குமார் நேபாள் பிறந்த நாள்
  • 1956ல் செருமானிய மொழியியலாளரான ஜோஸ்ட் கிப்பர்ட் பிறந்த நாள்
  • 1968ல் அமெரிக்க நடிகரும் தயாரிப்பாளருமான‌ ஏரன் ஏக்கார்ட்டு பிறந்த நாள்
  • 1983ல் பாக்கித்தானியப் பாடகரும் நடிகருமான‌ அதிஃப் அஸ்லம் பிறந்த நாள்
  • 1984ல் இந்தியப் பாடகியான சிரேயா கோசல் பிறந்த நாள்
  • 1994ல் அமெரிக்கப் பாடகியான கிறிஸ்டினா கிரிம்மி பிறந்த நாள் (இறப்பு 2016)

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead In History Today 12-03 March 12

  • 417ல் முதலாம் இன்னசெண்ட் (திருத்தந்தை) இறப்பு நாள்
  • 604ல் முதலாம் கிரகோரி (திருத்தந்தை) இறப்பு நாள் (பிறப்பு 540)
  • 1853ல் எசுப்பானிய-பிரான்சிய நச்சியலாளரும் வேதியியலாளருமான‌ மத்தாயூ ஆர்ஃபிலா இறப்பு நாள் (பிறப்பு 1787)
  • 1914ல் அமெரிக்கப் பொறியாளரும் தொழிலதிபருமான ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் இறப்பு நாள் (பிறப்பு 1846)
  • 1925ல் சீனக் குடியரசின் 1வது அரசுத்தலைவரான சன் யாட் சென் இறப்பு நாள் (பிறப்பு 1866)
  • 1942ல் நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளரும் வேதியியலாளருமான‌ வில்லியம் ஹென்றி பிராக் இறப்பு நாள் (பிறப்பு 1862)
  • 1960ல் இந்திய வரலாற்றாளரும் எழுத்தாளருமான‌ க்ஷிதி மோகன் சென் இறப்பு நாள் (பிறப்பு 1880)
  • 1972ல் சோவியத், உருசிய வானியற்பியலாளரான‌ வசீலி பெசென்கோவ் இறப்பு நாள் (பிறப்பு 1889)
  • 1999ல் அமெரிக்க-சுவிட்சர்லாந்து வயலின் இசைக் கலைஞரான‌ எகுடி மெனுகின் இறப்பு நாள் (பிறப்பு 1916)
  • 2006ல் தமிழ்த் திரைப்பட நடிகையான சுந்தரிபாய் இறப்பு நாள் (பிறப்பு 1923)
  • 2009ல் தமிழ்த் திரைப்பட நடிகரான ஓமக்குச்சி நரசிம்மன் இறப்பு நாள் (பிறப்பு 1936)
  • 2015ல் ஆங்கிலேய ஊடகவியலாளரும் நூலாசிரியருமான‌ டெர்ரி பிராச்செத் இறப்பு நாள் (பிறப்பு 1948)
  • 2016ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளரான‌ இலாயிடு சேப்ளி இறப்பு நாள் (பிறப்பு 1923)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleJune 30 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil June 30
Next articleமகா சிவராத்திரியாகிய இன்று நீங்கள் இப்படி தான் விரதம் இருந்து வழிபாடு செய்ய‌ வேண்டும்! மகா சிவராத்திரி தினத்தில் இவற்றை அவசியம் செய்ய வேண்டும்!