புத்தாண்டு பலன் – 2019 கன்னி!

0

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே எவ்வளவு அவசரமிருந்தாலும் பரபரப்பு இல்லாமல் சூழ்நிலைக்கு தக்கவாறு நடந்து கொள்ளும் உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்கள் ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் குரு, சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சனி சஞ்சாரம் செய்வதால் எந்தவொரு காரியத்திலும் எதிர்நீச்சல் போட வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிப்பதால் நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை சுக வாழ்வு சொகுசு வாழ்வில் பாதிப்பு போன்றவை ஏற்படும். உடல் நிலையும் சோர்வாக அமையும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் வீண் செலவுகள் உண்டாகும். வரும் 07.03.2019-ல் உண்டாக கூடிய சர்ப கிரக மாற்றத்தின் மூலம் 4-ல் கேது, 10-ல் ராகு சஞ்சரிக்க இருப்பதும் சாதகமான அமைப்பு என்று கூற முடியாது.

கணவன்- மனைவி இடையே உண்டாக கூடிய கருத்து வேறுபாடுகளால் ஒற்றுமை குறைவு உண்டாகும். உறவினர்களிடம் தேவையில்லாத பகை ஏற்படும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அவ்வளவு எளிதில் அனுகூலப்பலனை அடைய முடியாது. நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப்படும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சிக்கல் ஏற்படும். வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்கும் முயற்சிகளில் தடைக்கு பின் அனுகூலம் ஏற்படும்.

தொழில் வியாபார ரீதியாக போட்டி பொறாமைகள் நிலவும் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பாதுகாத்து கொள்வது, கூட்டாளிகளை அனுசரித்து நடப்பது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத இட மாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தை விட்டு பிரிய கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். புதிய இடம் புரியாத மொழி என பல்வேறு இன்னல்களை சந்திப்பீர்கள். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம்.

உடல் ஆரோக்கியம்
உடல் நிலை சுமாராக தான் இருக்கும். வாயு, உஷ்ண சம்மந்தமான பாதிப்புகளால் சற்று மருத்துவ செலவுகளும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தாமதப்பலன் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் சிறிது மருத்துவ செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். நெருங்கியவர்களுக்கு உடல்நிலை பாதிப்பதால் மன அமைதி குறையும். அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் எதையும் சமாளிக்க கூடிய பலமும் வலிமையும் கூடும்.

குடும்பம் பொருளாதாரநிலை
குடும்ப ஒற்றுமை சுமாராக இருக்கும் கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் உண்டாகும். புத்திர வழியில் செலவுகள் இருந்தாலும் அதனால் அனுகூலமும் உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஒரு நேரம் ஆதரவாக இருந்தாலும் ஒரு சில நேரங்களில் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்ப்படுத்துவார்கள். பொருளாதார நிலை சுமாராகவே அமையும். தேவையற்ற செலவுகளை குறைப்பதால் மட்டுமே அனுகூலம் உண்டாகும். உடன் பிறந்தவர்களின் உதவி சற்று கிடைக்கும்.

உத்தியோகம்
உத்தியோகத்தில் வேலைபளுவும் கூடுதல் பொறுப்புகளும் அதிகரித்தாலும் உங்கள் பெயர் பதவி உயர்வுக்கு சிபாரிசு செய்யப்படும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்க சிரமம் ஏற்பட்டாலும் உங்கள் பேச்சாற்றலால் அனைவரின் ஆதரவைப் பெறுவீர்கள். சில சமயங்களில் எவ்வளவு தான் பாடுபட்டாலும் அதிகாரிகளின் ஆதரவைப் பெற முடியாமல் திண்டாட நேரிடும். பொறுப்புகள் கூடும் காலம் என்பதால் எதிலும் கவனமாக இருப்பது நல்லது.

தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்கள் மந்தமான நிலையை சந்தித்தாலும் எதிர்பாராத லாபங்களையும் அடைவீர்கள். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன்களும் உண்டாகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் தொழிலை அபிவிருத்தி செய்யும் நோக்கம் நிறைவேறும். சில போட்டி பொறாமைகளை சந்தித்தாலும் எதிலும் எதிர்நீச்சல் போட்டு முன்னேறி விடுவீர்கள்.

கமிஷன்- ஏஜென்ஸி
கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்றவற்றால் சுமாரான லாபம் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது, பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதையும், வாக்குறுதி கொடுப்பது போன்றவ்றறையும் தவிர்த்து விடுவது நல்லது. கொடுத்த கடன்கள் தடைகளுக்குப் பின் வசூலாகும்.

அரசியல்
இதுவரை இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். தேவையற்ற சேர்க்கைகளையும், நட்புகளையும் தவிர்ப்பது நல்லது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றினால் மட்டுமே மக்களின் ஆதரவை பெற முடியும். வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்புகளால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலங்கள் அதிகரிக்கும்.

விவசாயிகள்
மகசூல் சற்று சுமாராக இருந்தாலும் சந்தையில் நல்ல விலை போகும். பங்காளிகளை அனுசரித்துச் செல்வதும் வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பதும் மிகவும் நல்லது. பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும். கால்நடைகளால் ஒரளவுக்கு லாபத்தைப் பெறுவீர்கள். ஆழ்கிணறு போடுவது புதிய நவீன கருவிகள் வாங்குவது போன்றவற்றை சற்று தள்ளி வைப்பது நல்லது.

கலைஞர்கள்
நல்ல வாய்ப்புகள் கைநழுவிப் போகும் என்பதால் இருப்பதை சிறப்பபுடன் பயன்படுத்தி கொள்வத நல்லது. புதிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் ஏற்படும். இடைவிடாத உழைப்பால் உடல் நிலையில் சிறு பாதிப்புகள் உண்டாகும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். கார் பங்களா போன்றவற்றினால் வீண் விரயங்களை சந்தித்தாலும் சொகுசு வாழ்வு பாதிப்படையாது.

பெண்கள்
பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படாது. உற்றார் உறவினர்கள் அனுசரித்து நடந்து கொண்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடல் நிலை சுமாராக இருக்கும். மருத்துவ செலவுகள் ஏற்படும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் தடைகளுக்குப் பின் கிட்டும். புத்திர வழியில் வீண் செலவுகள் உண்டாகும். பணிபுரிபவர்களுக்கு வீண் சங்கடங்கள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து விடுவீர்கள்.

மாணவ- மாணவியர்
கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது மூலம் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்ப்பதால் கல்வியில் முழுகவனம் செலுத்த முடியும். நண்பர்களின் ஆலோசனை நற்பலனை தரும்.

ஜனவரி
உங்கள் ராசியாதிபதி புதன் 4-ல், ராகு 11-ல் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். கணவன்- மனைவியிடையே இருந்து வந்த பிரச்சனைகள் மறையும். பொருளாதார மேம்பாடுகளால் கடன்களும் படிப்படியாகக் குறைந்து நிம்மதி நிலவும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சற்று நிம்மதியுடன் பணிபுரிய முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேற தாமதம் உண்டாகும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் – 14-01-2019 பகல் 12.53 மணி முதல் 16-01-2019 இரவு 08.09 மணி வரை.

பிப்ரவரி
ஜென்ம ராசிக்கு 11-ல் ராகு, 4-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும், மாதபிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதும் ஓரளவுக்கு சாதகமான அமைப்பு ஆகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். சுப காரியங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் தாமதப்படும். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சினைகள் சற்றே விலகும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். தொழில் வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் குறைவதால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடப்பது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும் ஊதிய உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் நினைத்த மதிப்பெண்களை பெற முடியும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 10-02-2019 இரவு 07.37 மணி முதல் 13-02-2019 அதிகாலை 04.19 மணி வரை.

மார்ச்
ஜென்ம ராசிக்கு 5-ல் சுக்கிரன், மாதமுற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். குடும்ப தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்துவிட முடியும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது மூலம் தேவையற்ற வழியில் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் நிலவும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவுக்கு லாபம் கிட்டும். மாணவர்கள் முயன்று படித்தால் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் – 10-03-2019 அதிகாலை 01.19 மணி முதல் 12-03-2019 காலை 10.24 மணி வரை.

ஏப்ரல்
மாதகோளான சூரியன் 7, 8-ல் சாதகமின்றி சஞ்சரிப்பதும், 4-ல் சனி, கேது சஞ்சாரம் செய்வதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, எந்தவொரு விஷயத்திலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களால் தேவையற்ற மன சஞ்சலங்கள் தோன்றி ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். புத்திரர்களாலும் நிம்மதி குறையும். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் வீண் விரயங்களை தவிர்க்க முடியும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரளவுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்தநிலை நிலவும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 06-04-2019 காலை 07.23 மணி முதல் 08-04-2019 மாலை 03.53 மணி வரை.

மே
ஜென்ம ராசிக்கு 8-ல் சூரியன் 4-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, எந்தவொரு விஷயத்திலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். வீடு வாகனங்களால் வீண் விரயம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியாமல் போகும். தொழில் வியாபாரத்தில் உங்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரிப்பதால் வர வேண்டிய வாய்ப்புகள் கை நழுவிப் போகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். மாணவர்கள் நல்ல நட்புகளாக தேர்தெடுத்து பழகுவது நல்லது. ராகு கேதுவுக்கு சர்ப சாந்தி செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 03-05-2019 பகல் 02.39 மணி முதல் 05-05-2019 இரவு 10.30 மணி வரை மற்றும் 30-05-2019 இரவு 11.04 மணி முதல் 02-06-2019 காலை 06.45 மணி வரை.

ஜுன்
மாதகோளான சூரியன் 9, 10-ல் சாதகமாக சஞ்சரிப்பதும், 10-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் ஓரளவுக்கு சாதகமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும் ஆதரவும் அபிவிருத்தியை பெருக்க உதவும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடிய வாய்ப்புகளும், பயணங்களால் அனுகூலங்களும் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கல்வி தரத்தை உயர்த்தி கொள்ள உதவும். முருகனை வழிபடுவது நற்பலனை தரும்.
சந்திராஷ்டமம் – 27-06-2019 காலை 07.44 மணி முதல் 29-06-2019 மாலை 04.03 மணி வரை.

ஜுலை
ராசிக்கு 11-ல் செவ்வாய், புதன், 10, 11-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் அதிகரிக்கும். உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் சற்றே குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வதன் மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். பொன் பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிந்தித்து செயல்படுவது, பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை பெற முடியும். தொழில் வியாபாரம் தடையின்றி நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது சிவனை வணங்குவது நல்லது.
சந்திராஷ்டமம் – 24-07-2019 மாலை 03.40 மணி முதல் 27-07-2019 அதிகாலை 01.10 மணி வரை.

ஆகஸ்ட்
ராசிக்கு 10-ல் ராகு, 11-ல் சூரியன் சஞ்சரிப்பதும் 3-ஆம் தேதி முதல் 11-ல் புதன் சஞ்சாரம் செய்ய இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்தநிலை போன்ற பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கணவன்- மனைவி தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது மூலம் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் லாபங்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்பட்டாலும் பெரிய மனிதர்களின் ஆதரவுகள் கிடைக்கும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 20-08-2019 இரவு 10.30 மணி முதல் 23-08-2019 காலை 08.55 மணி வரை.

செப்டம்பர்
இம்மாதம் 3-ல் குரு, 12-ல் சூரியன், செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். பூமி, மனை, வண்டி வாகனங்கள் போன்றவற்றால் வீண் விரயங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியாமல் போகும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் உங்களுக்கு போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் அதிகரிப்பதால் வர வேண்டிய வாய்ப்புகள் கை நழுவிப் போகும். கூட்டாளிகளும் வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். மாணவர்கள் நல்ல நட்புகளாக தேர்தெடுத்து பழகுவது நல்லது. சிவவழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 17-09-2019 அதிகாலை 04.20 மணி முதல் 19-09-2019 இரவு 07.28 மணி வரை.

அக்டோபர்
ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய் 4-ல் சனி, கேது சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் சோர்வு ஏற்பட்டு அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் சிரமம் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடைகளுக்கு பின்பே அனுகூலம் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் அதிகரிக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி, பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் இதுவரை சந்தித்த சோதனைகள் சற்றே குறையும். மாணவர்களுக்கு மதிப்பெண்கள் குறையும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் – 14-10-2019 காலை 10.20 மணி முதல் 16-10-2019 இரவு 08.45 மணி வரை.

நவம்பர்
இம் மாதம் 10-ல் ராகு, மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளிலிருந்த நெருக்கடிகள் குறையும். சுப காரியங்களுக்கான முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களும் சாதகமாகவே நடந்து கொள்வார்கள். 5-ஆம் தேதி முதல் குரு 4-ல் சஞ்சரிக்க உள்ளதால் உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்து கொள்வது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைவதால் புதிய வாய்ப்பு தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். வேலை பளுவும் குறையும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப்பின் கிடைக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் – 10-11-2019 மாலை 05.20 மணி முதல் 13-11-2019 அதிகாலை 03.10 மணி வரை.

டிசம்பர்
சுக்கிரன் 4,5-ல் சாதகமாக சஞ்சரிப்பதாலும், மாத முற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சாரம் செய்வதாலும் பொருளாதார ரீதியாக ஒரளவுக்கு மேன்மைகளை அடைய முடியும். கணவன்- மனைவி ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவினைப் பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். திருமண சுப காரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்கு பின் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே லாபத்தை அடைய முடியும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவுபடுத்தும் நோக்கத்தை சற்று தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளையும் பொழுது போக்குகளையும் தவிர்ப்பது நல்லது. சிவ வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 08-12-2019 அதிகாலை 01.30 மணி முதல் 10-12-2019 பகல் 11.20 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 4,5,6,7,8
நிறம் – பச்சை, நீலம்
கிழமை – புதன், சனி
கல் – மரகத பச்சை
திசை – வடக்கு
தெய்வம்- ஸ்ரீ விஷ்ணு

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபுத்தாண்டு பலன் – 2019 சிம்மம்!
Next articleஇன்றைய ராசிப்பலன் – 30.12.2018 ஞாயிற்றுக்கிழமை!