Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan இன்றைய ராசிப்பலன் – 30.12.2018 ஞாயிற்றுக்கிழமை!

இன்றைய ராசிப்பலன் – 30.12.2018 ஞாயிற்றுக்கிழமை!

0
1826

இன்றைய பஞ்சாங்கம்
30-12-2018, மார்கழி 15, ஞாயிற்றுக்கிழமை, நவமி திதி பின்இரவு 01.35 வரை பின்பு தேய்பிறை தசமி. அஸ்தம் நட்சத்திரம் காலை 08.23 வரை பின்பு சித்திரை. நாள்முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

மேஷம்
இன்று வீட்டில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். திருமண பேச்சுவார்த்தைகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். மன அமைதி இருக்கும்.

ரிஷபம்
இன்று உடன் பிறந்தவர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். திருமணம் சுப காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் அனுகூலம் கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும். வெளி வட்டார தொடர்புகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.

மிதுனம்
இன்று உங்களுக்கு தேவையற்ற பிரச்சினைகளால் மனநிம்மதி குறையும். பிள்ளைகள் மூலம் வீண் செலவுகள் ஏற்படலாம். திருமண முயற்சிகளில் சில தடங்கலுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்க்கும் காரியங்கள் எளிதில் நிறைவேறும்.

கடகம்
இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

சிம்மம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வீண் செலவுகள் தோன்றும். எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. பெரிய மனிதர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

கன்னி
இன்று உங்களுக்கு இருந்த ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகள் நீங்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். பணவரவு அமோகமாக இருந்து கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு எதிர்பார்த்த லாபம் கிட்டும். சேமிப்பு உயரும்.

துலாம்
இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும்.

விருச்சிகம்
இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.

தனுசு
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலம் இருக்கும்.

மகரம்
இன்று நீங்கள் பணப் பிரச்சினையிலிருந்து விடுபட சிக்கனமுடன் செயல்பட வேண்டும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும். எதிலும் சிந்தித்து செயல்படுவது உத்தமம்.

கும்பம்
இன்று உங்களுக்கு மனகுழப்பம் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுப முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவதை தவிர்த்தால் பிரச்சினைகள் குறையும். உடல்நிலையில் கவனம் தேவை.

மீனம்
இன்று உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பங்கள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும்.

Previous articleபுத்தாண்டு பலன் – 2019 கன்னி!
Next articleபுத்தாண்டு பலன் – 2019 துலாம்!