பிரபல கால்பந்து வீரருடன் மாயமான விமானம் கண்டுபிடிப்பு! பெரும் கலக்கத்தில் ரசிகர்கள்!

0

பிரான்ஸ் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரர் எமிலியானோ சாலாவை ஏற்றிக்கொண்டு செல்லும்போது மாயமான விமானம், கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரான்ஸ் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரரான எமிலியானோ சாலா, இருவர் மட்டுமே பயணிக்க கூடிய விமானம் மூலம் ஜனவரி 21ம் தேதி பிரான்ஸ் நாட்டின் நன்டேஸ் பகுதியில் இருந்து வேல்ஸ் நாட்டின் கார்டிஃப் நோக்கி சென்றுகொண்டிருந்தார்.

கர்ன்ஸிக்கு வடக்கே 24 நாட்டிக்கல் தூரத்தில் சென்றுகொண்டிருக்கும் போது, திடீரென விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளது.

இதனையடுத்து விரைந்து சென்ற அதிகாரிகள் தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட ஆம்பித்தனர். இதில் எமிலியானோவுடன் சேர்ந்து 59 வயதான விமான ஒட்டி டேவிட் இபோட்சனும் மாயமானார்.

இந்த நிலையில், இன்று காலை 9 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) தீவிரமான தேடுதல் வேட்டை நடத்திய 2 கப்பல்கள் மாயமான விமானத்தை கண்டுபிடித்துவிட்டதாக செய்தி வெளியிட்டுள்ளன.

இதனை தற்போது அவருடைய குடும்பத்திற்கும் அதிகாரிகள் தெரியப்படுத்தியுள்ளார். மேலும், மாயமான கால்பந்து வீரர் மற்றும் விமான ஒட்டி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை எனவும் அதிகாரிகள் சந்தகேம் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவாழ்நாளில் மறக்கவே மாட்டீங்க இந்த புகைப்படத்தை! முட்டையின் மிகப்பெரிய ரகசியம்!
Next articleநான் ஓரின சேர்க்கையாளரின் தோழி! அதிரடியாக கூறிய இளம் நடிகை!