பாடும் போது எழுந்து நிற்காததால் கர்ப்பிணியாக இருந்த பிரபல பாடகி சுட்டுக் கொலை!!

0
553

பாகிஸ்தானில் இசை கச்சேரி நிகழ்ச்சிஒன்றில், எழுந்து நின்று பாடாத கர்ப்பிணி பாடகி சுட்டு கொல்லப்பட்டசம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ள லர்கானா பகுதியில்இசை கச்சேரி ஒன்று நடைபெற்று கொண்டிருந்தது.

அதில் பாடகிசமீனா சமோன் (24) என்பவர் பாடல்பாடிக் கொண்டிருந்தார்.

அப்போது பார்வையாளர்கள்மத்தியில் இருந்த தரிக் அகமது ஜடோய் என்பவர், சமோனை எழுந்து நின்று பாடுமாறு கூறியுள்ளார்.

ஆனால் தான் கர்ப்பிணி என்பதால், நின்று கொண்டு பாட முடியாது என அவர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தரிக் அகமது தன்னிடம்இருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாகசுட்டார்

இதில் குண்டுகள் துளைத்த நிலையில் பாடகி சமோன் படுகாயம் அடைந்துகீழே விழுந்துள்ளார்.அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சமோன் இறந்து விட்டதாக கூறியுள்ளர்.

இதுகுறித்து சமோனின் கணவர் அளித்த புகாரின் பேரில்பொலிசார் வழக்குப்பதிவு செய்து, தரிக் அகமதுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: