பற்களுக்கு பின்னால் இருக்கும் அசிங்கமான மஞ்சள் கறையை போக்க சூப்பர் டிப்ஸ்!

0
3361

பொதுவாக பலா் இந்தபிரச்சினைகளால் அவதிப்படுகின்றனா். பற்களுக்கு பின்னால் படியும் மஞ்சள் கறையானது, உப்புகள், சாப்பிட்ட உணவுகளினாலும் இவ்வகையான படிவு உண்டாகிறது. இவை பற்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும், அதாவது பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கும் சொத்தை பற்கள் உண்டாவதற்கும் காரணமாக அமைந்து விடுகிறது.

முதலில் பல்லில் உண்டாகி இருக்கும் கறையை இல்லாமல் ஆக்குவது கடினமான ஒன்றாகும். எனவே நாம் இயற்கையான முறையில் எவ்வாறு நீக்கலாம் என்பதை பாா்ப்போம்.

*  வெதுவெதுப்பான நீாில் சிறிதளவு உப்பு போட்டு வாய் கொப்பளிப்பது நல்லது இது வாய் துா்நாற்றம் மற்றும் தொற்றுகளை தடுக்கிறது.

* எலுமிச்சை சாறு இதையும் வெதுவெதுப்பான நீாில் கலந்து வாய் கொப்பளிப்பது நல்லது இதில் ஆன்டி பாக்டீரியல் தன்மை உள்ளதால். இது பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை வெண்மையாக்கவும், வாய் துர்நாற்றத்தை போக்கவும் உதவுகின்றது.

* கிராம்பில் இயற்கையான ஆன்டி பாக்டீரியல் முலக்கூறுகள் உள்ளதால் இதுவும் வாய் துர்நாற்றம் மற்றும் தொற்றுகளை தடுக்க உதவுகின்றது.

தேவையான பொருட்கள்
அரை டீஸ்பூன் கிராம்பு
1 கப் தண்ணீர்

முதலில் நீங்கள் கிராம்பை நீரில் இட்டு இருபது நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து 2 – 3 வேளை வாய் கொப்பளித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

* கடுகு எண்ணெய் ஈறுகளை வலிமையாக்கி உணவு துகள்களில் இருக்கும் பாக்டீரியாக்களை அழிக்க உதவுகின்றது.

தேவையான பொருட்கள்
1 டீஸ்பூன் கடுகு எண்ணெய்
அரை கப் தண்ணீர்
வெதுவெதுப்பான நீரில் கடுகு எண்ணெய்யை கலந்து ஒரு பஞ்சினால் தொட்டு, ஈறுகளை துடைக்க வேண்டும்.

* கற்றாளை, எலுமிச்சை ,க்ளிசரின் ஆகியவை கலந்த பேஸ்ட் செய்து பற்களில் இருக்கும் கறைளை போக்க முடியும்.

தேவையான பொருட்கள்

கற்றாளை ஜெல் – 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை – 1 டேபிள் ஸ்பூன்
வெஜிடபிள் கிளிசரின் – 2 டேபிள் ஸ்பூன்
இவை மூன்று பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கலந்து பற்களை டூத் பிரஸை கொண்டு தீட்டி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: