கொசுக்களை விரட்ட வேப்பிலையை எப்படி பயன்படுத்தலாம்?

0

கொசுவை விரட்ட பல்வேறுவிதமான வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனா். எலட்ரானிக் சாதனங்களை விட இயற்கையான வழிமுறைகளில் ஒன்று வேப்பிலை தான் எனவே கொசுவை விரட்ட வேப்பிலையை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைப் பாா்ப்போம்.

வேப்ப விதையிலிருந்து பெறப்படும் எண்ணெயில் தேங்காய் எண்ணெய் சிறிதளவு கலந்து உடலில் பூசினால் கொசுக்கள் கடிக்காது, இது சருமத்திற்கு பாதிப்பினை தராத ஒன்று

வேப்ப எண்ணெய் குழந்தைகளுக்கும் நல்லது, அவா்களுக்கும் இதனை பூசி விட்டால் இதிலிருந்து வரும் வாசனை கொசுக்களை அருகில் கூட நெருங்கவிடாது. சிலா் இதனால் அலா்ஐி ஏற்படும் என்று பயந்தால் ,நீங்கள் சிறிது எண்ணெய் எடுத்து பூசி பாா்த்துவிட்டு பயன்படுத்தினால் நல்லது.

உடல் முழுதும் எண்ணெய்யை பூசினால் உங்களுக்கு அசௌகரியமாக இருந்தால் ஒரு சுட்டியில் வேப்ப எண்ணெய்யை ஊற்றி திாி வைத்து அதற்கு மேல் ஒரு பல்லு பூண்டு வைத்து தீபமேற்றினால் கொசுக்கள் அந்தப்பக்கமே வராது.

இன்றும் கிரமப்புறங்களில் பெரும்பாலான வீடுகளில் மாலை நேரத்தில் வேப்பிலையை தீயில் போட்டு புகை போடுவாா்கள். இதனால் கொசுக்கள் வராது.

வேப்ப எண்ணெய்யுடன் கற்பூரம் சிறிதளவு சேர்த்து காலை, மாலை வேளைகளில் வீட்டுக்கு சாம்பிராணிப் புகையாக போட்டால் கொசுக்கள் வராது.

மேலும் கொசுக்களை விரட்டும் பூண்டு, சாமந்தி போன்ற செடிகளை வளர்ப்பதனாலும் கொசுக்கள் வராது.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவீட்டில் எந்தெந்த பொருட்களை எந்தெந்த திசைகளில் வைக்க வேண்டும் என தெரியுமா?
Next articleபற்களுக்கு பின்னால் இருக்கும் அசிங்கமான மஞ்சள் கறையை போக்க சூப்பர் டிப்ஸ்!