நேருக்கு நேர் எதிர்கொண்ட பெண்ணின் கலங்க வைக்கும் வீடியோ! பாலி-யல் அடிமையாக சித்திரவதை செய்த ஐ.எஸ் தீவிரவாதி!

0

நேருக்கு நேர் எதிர்கொண்ட பெண்ணின் கலங்க வைக்கும் வீடியோ! பாலியல் அடிமையாக சித்திரவதை செய்த ஐ.எஸ் தீவிரவாதி!

ஈராக் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் யாசிடி பெண், தன்னை பாலியல் அடிமையாக வைத்திருந்த ஐ.எஸ் போராளியை நேருக்கு நேர் சந்தித்து சரமாரி கோள்விகளால் துளைத்தது அனைவரையும் உருக வைத்துள்ளது.

ஈராக் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஐ.எஸ் போராளி ஹமாமை நேருக்கு நேர் எதிர்கொண்ட பாதிக்கப்பட்ட யாசிடி பெண் அஸ்வாக் ஹாஜி ஹமீத், நீ ஏன் என்னை அப்படிச் செய்தாய்?

சித்திரவதை என்றால் என்ன? சித்திரவதை செய்யப்படுவது என்ன? தனிமை என்ன? என்பது இப்போது உனக்குத் தெரியும்.

உனக்கு அறிவு, உணர்வுகள் இருந்தால், நான் 14 வயதில் இருந்தபோது என்னை பாலியல் பலாத்காரம் செய்திருக்க மாட்டாய்.

நான் உங்கள் மகனின் வயது கொண்டிருந்தேன் என்று தொடர்ந்த ஹமீத் இறுதியில் மயக்கம் அடைந்து தரையில் விழுந்தார்.

இந்த நிகழ்வின் போது கைவிலங்குடன் நிற்க வைக்கப்பட்டிருந்த ஹமாம், ஹமீத்தை நேராக பார்க்க முடியாமல் தலையைத் குனிந்த படி நின்றார்.

ஹமாமை எதிர்கொள்வதற்கு முன், 2014ம் ஆண்டு சிஞ்சர் மலையின் யாசிடி மையப்பகுதியில் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் ஆயிரக்கணக்கான ஆண்கள் கொல்லப்பட்ட பின்னர், பலியால் அடிமைகளாக விற்கப்பட்ட 300-400 யாசிடி சிறுமி மற்றும் பெண்கள் மத்தியில் அவர் எப்படி இருந்தார் என்பதை தைரியமாக விவரித்தார் ஹமீத்.

சிரியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட தன்னை, ஈராக், மொசூலில் உள்ள அடிமைகள் சந்தையில் ஐ.எஸ் போராளியான அபு ஹமாம் வாங்கியதை நினைவு கூர்ந்த ஹமீத், ஹமாம் ஒரு நாளைக்கு பல முறை துஷ்பிரயோகம் செய்தும், அடித்தும் சித்திரவதை செய்ததாக கூறினார்.

எனினும், 2015ம் ஆண்டு ஜேர்மனிக்கு தப்பிய ஹமீத், அங்கு புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளார். ஆனால், எதிர்பாராதவிதமாக ஒரு நாள் ஸ்டட்கர்ட் தெருவில் சென்றுக்கொண்டிருந்த போது ஹமாமை பார்த்துள்ளார்.

அப்போது, தான் இருக்கும் இடம் தனக்கு தெரியும் என ஹமீத்தை ஹமாம் மிரட்டியுள்ளான்.

ஜேர்மனி தெருவில் ஐ.எஸ் போராளி ஹமாம் வளம் வருதாக ஹமீத் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், தங்களால் நடவடிக்கை எடுக்க முடியாது என கூறிய ஜேர்மனி பொலிசார், ஹமாமும் அவரை போலவே அகதி என பதிவு செய்துள்ளதாக கூறியுள்ளனர்.

இதனால், மீண்டும் பயந்து நடுங்கிய ஹமீத், ஈராக்கிற்கு திரும்பிச்சென்று அங்குள்ள அகதிகள் முகாமில் தனது தந்தையுடன் வசிக்க முடிவெடுத்துள்ளார்.

எனினும், இதனையடுத்து ஈராக் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஹமாம், எவ்வாறு நாடு கடத்தப்பட்டார் என்ற தகவல்கள் தெளிவாக இல்லை.

இங்கே கிளிக் செய்து படங்களை பார்வையிடவும்!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமுற்றும் இரு நாடுகளுக்கிடையிலான பிரச்சினை! இலங்கையை விட்டு வெளியேற சுவிஸ் தூதரக ஊழியருக்கு தடை!
Next article5G தொழில்நுட்பம் தொடர்பாக வெளியான சுவாரஸ்ய தகவல்!