நா-ளை-ய தினம் விருச்சிக ராசியில் கேது உடன் இணையப்போகும் சுக்கிரனால் இனி நற்-பலன்களை அடையப்போகும் ராசிக்காரர்கள் யார்!

0

துலாம் ராசியில் சஞ்சரித்த சுக்கிரன் அக்டோபர் 2ஆம் தேதி முதல் விருச்சிக ராசியில் உள்ள கேது உடன் இணையப்போகிறார்.

இந்த சுக்கிரப் பெயர்ச்சியாலும் கேது சுக்கிரன் கூட்டணியாலும் எந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும் என்னென்ன பரிகாரங்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் சுக்கிரன் கேது உடன் இணைந்து மறைவதால் வீட்டில் தம்பதியர் இடையே ஊடல்கள் அவ்வப்போது எட்டிப்பார்க்கும்.

வாழ்க்கைத்துணையின் உடல் நலத்தில் கவனம் வைக்கவும். இருவருமே கவனமாக இருந்தால் பாதிப்பை தவிர்க்கலாம். இல்லாவிட்டால் மருத்துவ செலவுகள் எற்படும்.

விலை உயர்ந்த பொருட்களைப் பத்திரப்படுத்தவும். திடீர் செலவு வருகிறதே என்று கவலைப் பட வேண்டாம் பாதிப்பை குறைக்க வெள்ளிக்கிழமையன்று துர்க்கா மந்திரம் கூறி வணங்கலாம். மகாளய அமாவாசை நாளில் பசுவிற்கு அகத்திக்கீரை கொடுக்கலாம்.

ரிஷபம்

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் வீட்டில் களத்திர ஸ்தானத்தில் கேது உடன் அமரப்போவதால் வாழ்க்கை துணை உடனான காதல் உணர்வுகள் அதிகரிக்கும்.

சுக்கிரன் பார்வை கிடைப்பதால் சிலருக்கு காதல் கணிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது. சிலருடைய தசாபுத்திக்கு ஏற்ப குடும்ப வாழ்க்கையில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலை தொழில் விசயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும்.

சிறிய அளவில் உடல்நலக்குறைவு ஏற்படும். அலுவலகத்தில் எதிர்பாலினத்தவர்கள் விசயத்தில் சற்று கவனமாக இருக்கவும்.

இல்லை எனில் மதிப்பு மரியாதைக்கு பங்கம் ஏற்பட்டு விடும். சுக்கிரனின் அருட் பார்வை கிடைக்க வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஓரையில் விளக்கேற்றி வழிபடலாம்.

மிதுனம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் மறைவதால் உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும்.

வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். வேலை பார்க்கும் இடத்தில் கடும் உழைப்பை கொடுக்க வேண்டிய காலமிது. கவலைகள், சங்கடங்கள் சூழும் காலம் என்பதால் வெள்ளிக்கிழமை நெய்தீபம் ஏற்றி அம்பிகையை வணங்கலாம்.

கடகம்

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில் கேது உடன் பயணிக்கப் போகிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்வது வருமானம் அதிகரிப்பதற்கான மாதம் இது.

வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் மீது காதல் மழை பொழியும் நேரமிது. பண வரவு அதிகரிக்கும்.

கூட வாழ்க்கைத் துணையுடன் இதே வேகத்தோடு இன்ப சுற்றுலா சென்று வாருங்கள். வெள்ளிக்கிழமை அம்மன் கோவில்களில் விளக்கேற்ற மேலும் நன்மைகள் நடக்கும்.

சிம்மம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் அமரப்போவதால் வீட்டுக்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள்.

அம்மாவின் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும். குடும்பத்தில் உறவினர்களால் சில சங்கடங்கள் வர வாய்ப்புள்ளதுபேச்சில் கவனம் தேவை. சண்டை ஏற்பட்டால் விட்டுக்கொடுத்து செல்லவும்.

வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு மல்லிகை, முல்லை பூக்களை வாங்கித் தரலாம். பெண்கள் வலது விரலில் வைர மோதிரம் அணியலாம்.

கன்னி

ராசி நாயகன் சுக்கிரன் ராசிக்கு 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தில் அமர்ந்து உள்ளார். உங்களின் பேச்சுத்திறமையும், அழகியலும் அதிகரிக்கும். உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும்.

உடல் நலனில் சின்னச் சின்ன ஏற்படும். எனவே அவ்வப்போது அக்கறையோடு சிறு பிரச்சினைகளையும் கவனியுங்கள். சிறு ஆன்மீகப் பயணம் செல்ல வேண்டியிருக்கும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாரை விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடக்கும். சிவன் கோவிலுக்கு சென்று சந்தனம் வாங்கித் தரலாம்.

துலாம்

இதுநாள் வரை உங்கள் ராசியில் சஞ்சாரம் செய்து வந்த சுக்கிரன் இனி உங்கள் ராசிக்கு 2வது வீட்டில் கேது உடன் அமரப்போகிறார். தன ஸ்தானத்தில் அமரப்போகும் சுக்கிரனால் பண வருவாய் அதிகாிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

கணவன் மனைவிக்கு இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும்.

திருமண வயதில் இருப்பவா்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும். அம்மன் கோவிலுக்கு சென்று செந்தூரம் வாங்கி தந்து வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

விருச்சிகம்

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசியில் கேது உடன் குடியேறியுள்ளார். பெண்களுக்கு பொன்னும் பொருளும் சேரும் நேரம் இது. ஆடம்பரமான பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் ஏற்படும்.

கணவன் மனைவி இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். சிலருக்கு வயிற்றில் பிரச்சினைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.

மாணவர்களுக்கு மேற்படிப்பு படிக்க வழி கிடைக்கும். ஆலய வழிபாடு செய்வதற்கான ஆன்மீக பயணம் செல்வதற்கான நேரம் கை கூடி வந்துள்ளது.

தனுசு

உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமாக 12வது வீட்டில் சுக்கிரன் கேது உடன் குடியேறியுள்ளார். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடைபெறும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடன் அந்நியோன்னியம் அதிகரிக்கும். பணவரவு சிலருக்கு உற்சாகத்தை தரும்.

பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள்.

படிப்புக்காக சிலர் வெளிநாடு செல்வார்கள். வெள்ளிக்கிழமைகளில் சிவ ஆலயத்திற்கு தயிரும் சர்க்கரையும் வாங்கித்தர நன்மைகள் அதிகரிக்கும்.

மகரம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் கேது உடன் அமரப்போகிறார். திருமண வாழ்க்கையில் உற்சாகமடையும் வகையில் பல செயல்கள் நடைபெறும் மாதம் இது. சிலருக்கு ஞானம் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரத்தில் பண வருவாய் அதிகாிக்கும். பிள்ளைகள் மூலம் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும். வீடு நிலம் வகையில் ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும்.

கும்பம்

உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் தொழில் ஸ்தானத்தில் கேது உடன் சுக்கிரன் அமர்ந்துள்ளார். தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் அமரப் போவதால் உங்கள் வேலையில், தொழிலில் உற்சாகத்தை ஏற்படுத்தும்.

புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் வார்த்தைகளில் கவனம் தேவை. அமைதியாக நிதானமாக பேசவும்.

குடும்பத்தில் மனைவியுடனோ அல்லது காதலியுடனோ சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்லவும். பசுவிற்கு வெல்லம், வாழைப்பழம் வாங்கித்தரலாம்.

மீனம்

உங்கள் ராசிக்கு 9ஆவது வீட்டில் சுக்கிரன் அமரப்போகிறார். வீட்டில் மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும். காதலி நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கும் காலம் இது.

காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் உற்சாகத்தை தரும். குடும்ப வாழ்க்கையில் சிலருக்கு குழப்பம் ஏற்படலாம் கவனம் தேவை. வெள்ளிக்கிழமையன்று சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்கு சந்தனம் வாங்கித்தர நன்மைகள் அதிகரிக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅக்டோபர் மாதம் ராசிப்பலன் ‍12 ராசிக்காரர்களுக்கும் இந்த மாதம் எப்படி அமையப்போகிறது! எதிர்பாராத பேரதிர்ஷ்டத்தை அடையும் ராசிக்காரர் யார்?
Next articleஇந்த மாதம் நவராத்திரி எப்போது ஆரம்பமாகிறது! முழுவிபரம் இதோ! இந்த நவராத்திரியில் செய்யவேண்டியவை என்ன!