இந்த மாதம் நவராத்திரி எப்போது ஆரம்பமாகிறது! முழுவிபரம் இதோ! இந்த நவராத்திரியில் செய்யவேண்டியவை என்ன!

0

ஒன்பது நாள்கள் அம்பாளை நினைத்து மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படக்கூடிய பண்டிகைதான் இந்த நவராத்திரி.

இதன்படி 2021 ஆண்டு நவராத்திரி திருவிழாவானது, அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கி 15 மற்றும் 16 ஆம் தேதி சரஸ்வதி பூஜை, விஜயதசமியுடன் நிறைவடைகிறது.

அந்தவகையில் நவராத்திரி விழாவை எப்போது தொடங்குகின்றது? எப்போது முடிகின்றது? இதன் சிறப்பம்சம்ங்களை என்ன என்பதை பார்ப்போம்.

நவராத்திரியின் சிறப்பம்சம்

இந்த ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி நவராத்திரி திருவிழா கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் இறுதி நாளில் விஜயதசமி அன்று ராவணன், மேகநாதர் மற்றும் கும்பகர்ணனின் பெரிய உருவ பொம்மைகளை உருவாக்கி அதனை தீ வைத்து எரித்து மக்கள் கொண்டாடுகின்றனர்.

இதனால், நவராத்திரி திருவிழாவானது தீமைக்கு எதிரான வெற்றியை அடையாளப்படுத்துவதாக கொண்டாடப்படுகிறது.

எப்போது தொடங்குகின்றது?

அக்டோபர் 7ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்குகிறது. அன்றைய தினம், அன்று, பிரதீபாத திதியில், நவதுர்கையில் முதல் அம்சமான சைலபுத்ரி தேவிக்கு பூஜை செய்யப்படும்.

இரண்டாம் நாளான அக்டோபர் 8 ம் தேதி வெள்ளிக்கிழமை. அன்று திவித்திய திதியில், நவதுர்கையில் இரண்டாவது அம்சமான பிரம்மச்சாரிணி தேவிக்கு பூஜை செய்ய வேண்டும்.

மூன்றாம் நாள் அக்டோபர் 9 ஆம் தேதி சனிக்கிழமை. அன்றைய தினம் திரிதியா மற்றும் சதுர்த்தி திதியின் போது, சந்திரகாந்த பூஜை மற்றும் கூஷ்மாண்ட தேவியை வணங்கி பூஜிக்க வேண்டும்.

நான்காம் நாள் அக்டோபர் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை. நவராத்திரியின் 4வது நாள் அன்று பஞ்சமி திதியின் போது ஸ்கந்தமாதாவிற்கு சிறப்பு பூஜை செய்து வழிபட வேண்டும்.

ஐந்தாம் நாள் அக்டோபர் 11ஆம் தேதி திங்கட்கிழமை. 5ம் நாளில் சஷ்டி திதியில் நவதுர்கையில் 5வது தேவியான காத்யாயணியை பூஜிக்க வேண்டும்.

ஆறாம் நாள் அக்டோபர் 12ஆம் தேதி செவ்வாய்கிழமை. அன்றைய தினம் சப்தமி திதி வேளையில், காளராத்திரி தேவிக்கு பூஜை செய்யுங்கள்.

ஏழாம் நாள் அக்டோபர் 13ஆம் தேதி புதன்கிழமை. அன்று, அஷ்டமி திதியின் போது மகா கௌரிக்கு பூஜை செய்ய வேண்டும்.

எட்டாம் நாள் அக்டோபர் 14ஆம் தேதி வியாழக்கிழமை. அன்றைய தினம், நவமி திதியில் சித்திதாத்திரி தேவிக்கு பூஜை செய்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.

இறுதி நாள் அக்டோபர் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை. அன்றைய தினம், தசமி திதியின் போது நவராத்திரியின் நிறைவு நாளில் துர்கா தேவிக்கு தசரா பண்டிகை வெகு விமர்சையாக கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

வழிபடும் முறை

ஒன்பது நாளும் ஒரு வேளை மட்டும் உணவருந்தி விரதமிருக்க வேண்டும். நவராத்திரி விரதமிருப்பவர்கள் சுமங்கலிப் பெண்களை தங்களது இல்லத்திற்கு அழைத்து அவர்களைப் பராசக்தியாகப் பாவித்துக் கொலுவின் அருகில் அமரச் செய்து வணங்கி மஞ்சள், குங்குமம், பட்டு, நாணயம், தாம்பூலம் போன்வற்றை வழங்கலாம்.

நவராத்திரியின் மற்றொரு பிரதான பூஜை குமாரி பூஜை என்றழைக்கப்படும் கன்னி பூஜை. அதாவது, நவராத்திரியின் 8 வது நாளில் 2 முதல் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து அவர்களை அம்மனின் அம்சமாக கருதி பொட்டு, வளையல், உணவு, இனிப்பு மற்றும் ஆடை கொடுத்து மகிழ்விக்கலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநா-ளை-ய தினம் விருச்சிக ராசியில் கேது உடன் இணையப்போகும் சுக்கிரனால் இனி நற்-பலன்களை அடையப்போகும் ராசிக்காரர்கள் யார்!
Next articleஅக்டோபர் மாதத்தில் முக்கிய கிரகங்களில் மாற்றத்தால் வாழ்வில் பெரும் பிரச்சினைகளை சந்திக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?