தலைசுற்ற வைக்கும் நிர்மலா தேவியின் வாட்ஸ் அப் உரையாடல்!

0
654

பேராசிரியை நிர்மலா தேவியின் வாட்ஸ் அப் உரையாடல்களை காவல்துறை பதிவு செய்துள்ளது.

இந்த உரையாடல் மார்ச் 2-ம் தேதி ஆரம்பித்து மார்ச் மாதம் 18-ம் தேதி வரை நடந்துள்ளது.

கல்லூரி மாணவி `PN mam 2′ என்று நிர்மலா தேவியின் பெயரைப் பதிவுசெய்திருக்கிறார். அதில் மாணவியிடம் நிர்மலா தேவி, `கண்ணுங்களா டீம் ஃபார்ம் பண்ணுவோமா?’ என்று செய்தி அனுப்பியுள்ளார். கூடவே, `மேடம் வெளியே போகும்போது கூட வர்றீங்களா… அமைதியா சாதிப்போமா’ என்று அதிகாலை 4:14 மணிக்குச் செய்தி அனுப்பியிருக்கிறார்.

அடுத்தடுத்து, நீங்கள் `U all very well known abt the competitions to survive in this world with SUCCESS with money and fame’ என்று ஒரு செய்தியும், `It needs not only talent but also some intelectual movement mentally and physically’ என்றும், `U r so brilliant in my point of view, U may 75% realise wt am going to tell’ என்றும் இரவு நேரம் 9:38 மணிக்கு ஏர்டெல் மொபைல் இணைப்பிலிருந்து அனுப்பியிருக்கிறார் நிர்மலா தேவி.

அடுத்த நாள் காலையில் 6:40 மணிக்கு, `U 6 all talented and u all will be appreciated by the society and it will lead good will’ என்றும், `Pls convey and discuss it. I think u may understand. if Ok pls ask them to send me good morning and good evening msgs in capital letters daily’ என்று ரகசியம் பேசியிருக்கிறார்.

மாணவிகளிடம், `திறமையானவர்கள்’ என்று வலை வீசியவர், `நீங்கள் சமுதாயத்துக்கு நல்லது செய்வீர்கள்’ என்று பாராட்டி, மாணவிகளிடையே இதுகுறித்து விவாதிக்கச் சொல்கிறார். இந்த விவகாரத்தைப் புரிந்துகொண்டால், `கேப்பிட்டல் லெட்டரில் குட்மார்னிங், குட்ஈவினிங்’ செய்தியை அனுப்பச் சொல்கிறார் நிர்மலா தேவி.

`இதில் விருப்பமில்லையென்றால், மிகப்பெரிய வாய்ப்பை இழப்பீர்கள்’ – `After that only i will spoke with the reliable one, If u r not willing defietly u all miss the good opportunity’ என்று ஆசைவார்த்தைகளை அள்ளிவிடுகிறார்.

`எனக்கும் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். நிறையவே சிந்தனை செய்தே இந்த விஷயத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்’ – ‘Moreover i am also having two girl children like u, so i will think think a lot in all the matters’ என்று செய்தி அனுப்பியுள்ளார்.

இந்தத் திட்டத்தை அடுத்த வாரம் நிறைவேற்ற இருப்பதாகத் தெரிவித்துள்ளார். I am going to execute my plan next week by the help of …. and …. first then… u and … eat egg per day this is my kind request. மேலும் மாணவியை தினமும் முட்டை சாப்பிடவும் ஆலோசனை வழங்குகிறார்.

மேலும், தன்னைத் தோழியாக நினைத்துக்கொள்ளவும் என்பவர், `நான் உங்களுக்கு எதிர்காலத்தில் கல்வி அளவிலும், நிதி அளவிலும் வழிகாட்டுவேன்’ என்கிறார். மேலும், How much u keep the secret that much u will be appreciated by all, ரகசியம் காக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

மற்ற மாணவியின் மொபைல் நம்பரைக் கேட்கிறார். மேலும் வாட்ஸ்அப் முகப்பில் அழகான படத்தை வைக்கவும் ஆலோசனை வழங்குகிறார். ‘Pls Send ………………number. Pls change all of ur dp’s with urs Super (individual) photos’ என்று செய்தி அனுப்பிய நிர்மலா தேவி, `மாணவி ஒருவர் குட்மார்னிங் செய்தியை அனுப்பியிருப்பதாகவும்’ தகவல் சொல்கிறார்.

இதற்கு மாணவி, ‘Mam I didn’t expect this, Idhu enakum enga familykum Suthama set agadhu. so pls inime idha pathi discussion venam ini. HOPE YOU UNDERSTAND’ என்று பதிலுக்குத் தகவல் அனுப்பியிருக்கிறார். `நான் இதை எதிர்பார்க்கவில்லை. இது எனக்கும் என்னுடைய குடும்பத்துக்கும் செட் ஆகாது. இனிமே இதைப் பற்றி விவாதிக்க வேண்டாம். என்னை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்’ என்கிறார் மாணவி.

மாணவியை விடாமல் நிர்மலா தேவி, ஆங்கிலத்திலும் தமிழிலும் `Opportunites coming then only i am suggesting, asking Think Think Think’ என்றும் அதிர்ஷ்டம் கதவைத் தட்டும்போது உபயோகப்படுத்திக்கணும், அதிர்ஷ்டம் எப்போதாவதுதான் வரும்’ என்கிறார். இதற்கு மாணவி, `For me it’s a SIN. Idhu Adhirstam ila, and dont repeat it.’ இது பாவச்செயல். இது அதிர்ஷ்டம் இல்லை. இதைத் திரும்பத் திரும்பக் கூற வேண்டாம் என்கிறார். இதற்கு நிர்மலா தேவி Ok ma. Take ur way. Sorry da என்று அனுப்புகிறார்.

மீண்டும் விடாமல் சிந்திக்கச் சொல்கிறார். அதற்கு மாணவி, தயவுசெய்து இன்னொரு பொண்ணுகிட்ட போய் இப்படி கேட்டுவிட வேண்டாம். இதைக் கேட்டாலேயே உடம்பெல்லாம் கூசுகிறது. நீங்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளுங்க, நீங்க கேட்ட மாதிரி வேறு யாரேனும் கேட்டிருந்தால் நடப்பதே வேறு. உங்கள் வயதுக்கும் பதவிக்கும் மரியாதை கொடுத்து அமைதியாகப் போகிறேன். அமைதியாக இருக்கிறதால நீங்க பேசினது சரின்னு நினைக்க வேண்டாம். இனிமே இப்படி யாரிடமும் பேச வேண்டாம் என்று எச்சரிக்கை செய்கிறார்.

மாணவி அனுப்பிய செய்தி `Dhayavu senju inoru ponu ta poi ipd ketradhinga, idhelam ketadhukae udambelam koosudhu, no matter nenga Ena vena nenachukanga, Nenga Keta Madhiri Ver Yaradhu Ketrundha nadakiraadhae Vera. Unga Vayasukum posting kum mariyaadha kuduthu amaidhiya poren, Amaidhiya irukadhala nenga pesunadha crct nu nenach, INIME YarayjM IPD Pesadhinga Enkita Indha Madhiri Pesuna apram Nadakuradhae vaera’ என்கிறார்.

ஆனால், நிர்மலா தேவி `விடாப்பிடியாக, ஒரு சின்ன, ஆனால் வலுவான ஏணிப்படி கண்முன் தெரிகிறது. அதனால்தான் Suggest பண்ணினேன். இதுவரை என்னை டெஸ்ட் பண்ணிணவிதத்திலிருந்து அவர்கள் `பாதுகாப்பில்’ ரொம்ப ரொம்பக் கவனம் செலுத்தியதிலிருந்துதான் சரி இப்போதே பேசுவோம் என்ற முடிவை எடுக்கவைத்தது. `Think think think’ என்று பதில் அனுப்புகிறார்.

மேலும், உன்னுடைய செய்தியைப் படித்துப்பார்த்தேன். எனக்கு இதுபோல் வாய்ப்பு வந்தது. ஆனால் விட்டுவிட்டேன். இதனால் நிலைமைகள் மாறின என்பதை I read ur msg. Good. I was also said once upon time like u. But situation changes என்று செய்தி அனுப்பியவர், நான் இல்லை என்றால், அந்த வேலை நடக்காமப்போகும்னு அர்த்தமில்லைனு நல்லா நான் தெரிஞ்சுக்கிட்டேன் என்று தன்னுடைய அனுபவத்தை மாணவிடம் பகிர்ந்துகொள்கிறார்.

கூடவே, `நான் எவ்வளவோ சந்தர்ப்பங்களை Miss பண்ணியிருக்கிறேன். அதுபோல் நினைச்சேன். வேணாம்னா விட்டுங்கடா, நான் சொல்லிடுறேன். அவ்வளவுதான் அவங்க வேற ஆளைப் பார்த்துப்பாங்க’ என்று தகவல் அனுப்பிய நிர்மலா தேவி அடுத்த நாள், Kannu’s realy u all r missing very very very…good OPPORTUNITIES என்று செய்தி அனுப்பியவர் What u think abt the positions Register, Collector? Not a bill collecor என்று கலாய்க்கவும் செய்கிறார்.

பாதுகாப்பு குறித்து விவரிக்கிறார். U think abt the security? how they think the security? Security is more more more. I always suggest u all, the best ones. மாணவி மீண்டும், `இது அதிர்ஷ்டம் இல்லை. இதைத் திரும்ப சொல்லாதீர்கள். எங்களைப் பற்றி என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? என்று பதிலுக்குச் சீறியிருக்கிறார். Idhu Adhristam illa and dont repeat it what do you think about me????

இதற்கு நிர்மலா தேவி `Ok da leave it. Sorry. I wont distrub u. Believe me. Believe me. Believe me’ என்று என்று கேட்டுக்கொள்கிறார். இதற்கு மாணவிகள் `How dare you ask me like this???’ என்று பதில் செய்தி அனுப்புகிறார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: