iPhone வைத்திருப்பவர்களுக்கு அவசர எச்சரிக்கை தகவல்! உடனடியாக இதை செய்திடுங்கள்!

0

சர்வதேச ரகசிய நிறுவனம் ஒன்று சில நிமிடங்களுக்குள்ளாக எத்தகைய ஐபோனாக இருந்தாலும் அதை திறக்கக்கூடிய புரோகிராம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதால் ஐபோன் வைத்திருப்பவர்கள் உடனடியாக தங்கள் போனை திறக்க உதவும் பாஸ்வேர்டை மாற்றும்படி எச்சரிக்கப்படுகிறார்கள்.

இதன்மூலம் எதிர் காலத்தில் தங்கள் போனிலுள்ள விடயங்கள் திருடப்படுவதைத் தவிர்க்கலாம்.

அட்லாண்டாவிலுள்ள கிரே ஷிஃப்ட் என்னும் தனியார் நிறுவனம் ஒன்று இந்த தொழில் நுட்பத்தை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க உளவுத்துறையில் நீண்ட நாள் பணி புரிந்தவர்களும் முன்னாள் ஆப்பிள் நிறுவன பொறியாளர் ஒருவரும் இணைந்து இந்த நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.

தனது வெப்சைட்டில் “கிரே ஷிஃப்ட் அனைவருக்குமானது அல்ல” என்று குறிப்பிட்டிருக்கும் இந்த நிறுவனம் சட்டத்திற்குட்பட்டு பயன்படுத்துவதற்காகவே இதை உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிடுகிறது.

இந்த தயாரிப்பிற்கு நிறுவனம் அளித்துள்ள பெயர் கிரே கீ. இது கையடக்கமான ஒரு கருவி, சில நிமிடங்களுக்குள் அது ஒரு ஐபோனுக்குள் நுழைந்து தகவல்களை எடுத்துவிடும் என்று கூறப்படுகிறது.

மாதிரிக் கருவிகள் பொலிஸ் மற்றும் தடயவியல் குழுக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

உபயோகிக்கும் விதத்தைப் பொருத்து 15,000 டொலர்கள் முதல் 30,000 டொலர்கள் வரை விலை நிர்ணயிக்கப்படுகிறது.

பாஸ்வேர்ட் எவ்வளவு சிறியதோ அவ்வளவு சீக்கிரம் இந்தக் கருவி மொபைல் போனுக்குள் நுழைந்து விவரங்களை சேகரிக்கிறது.

பத்து இலக்க பாஸ்வேர்ட் என்றால் மொபைலை திறக்க 4629 நாட்கள் எடுத்துக்கொள்ளும் கிரே கீ நான்கு இலக்க பாஸ்வேர்ட் என்றால் 6.5 நிமிடங்களுக்குள் மொபைலுக்குள் நுழைந்து அதிலுள்ள விடயங்களை ஒரு கணினித்திரையில் காட்டி விடுகிறது.

தற்போது பொலிசாரால் மட்டுமே பயன்படுத்தப்படும் இந்தக் கருவி தவறுதலாக தனியார் யாருடைய கையிலாவது கிடைத்துவிட்டால் பிரச்சினைதான். எனவேதான் ஆப்பிள் போன் வைத்திருப்பவர்கள் தங்கள் பாஸ்வேர்டை நீண்ட ஒன்றாக மாற்றிக்கொள்ளும்படி எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதலைசுற்ற வைக்கும் நிர்மலா தேவியின் வாட்ஸ் அப் உரையாடல்!
Next articleபிரித்தானியாவில் தலையில் காரை ஏற்றிய கொடூர நபர்: உயிருக்கு போராடும் பரிதாபம்!