சிஎஸ்கேவின் பயிற்சி ஆட்டத்தைக் காண இவ்வளவு பேர் கூடியுள்ளனரா? என்று வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள், பத்திரிகையாளர்கள் பலரும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
12-வது ஐபிஎல் போட்டி வரும் 23-ம்தேதி தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் முதல் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதற்கான தீவிரமான பயிற்சியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சிஎஸ்கே அணியினரின் நேற்றைய பயிற்சி ஆட்டத்தைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள், மைதானத்தில் சூழ்ந்தனர். இதில் தோனி பயிற்சி ஆட்டத்துக்குக் களமிறங்கும்போது கூடியிருந்த ரசிகர்கள் பலரும் பலமாகக் குரல் எழுப்பினர். இந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இந்த வீடியோவைக் குறிப்பிட்டு, பயிற்சி ஆட்டத்தைக் காண இவ்வளவு கூட்டமா? என்று வெளி நாட்டு கிரிக்கெட் வீரர்கள் பத்திரிகையாளர்கள் பலரும் பதிவிட்டுள்ளனர்.
Whistle parakkum paaru! #ThalaParaak #WhistlePodu #Yellove ?? pic.twitter.com/6EeMkYT0QY
— Chennai Super Kings (@ChennaiIPL) March 17, 2019
Tabraiz Shamsi
மற்றுமொரு பயிற்சி ஆட்டம்
இந்தியாவில் கிரிக்கெட் மீதான காதல் அடுத்த கட்டத்தில் உள்ளது.
Greg Bird
பயிற்சி ஆட்டத்திற்கு இப்படி ஒரு வரவேற்பு
Peter Lalor
இந்த ஒலி ஆழமானது…
Scott Styris
கட்டுப்படுத்த முடியாதது. இது பயிற்சி ஆட்டத்தில்…
Albie Morkel
உங்களது பயிற்சி ஆட்டத்திற்கு இந்த மாதிரி கற்பனை செய்து பாருங்கள்!