கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தடுக்கும் சானிட்டைஸர் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி!செய்முறை விளக்கம்!

0

உலக அச்சுறுத்தலாக உள்ள கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் சுகாதாரமாக இருப்பது குறித்து சுகாதார மையங்களின் விழிப்புணர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக முகத்தில் மாஸ்க் அணிவது, மக்கள் அதிகமாக கூடும் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது, முக்கியமாக கைகளை நன்கு சோப் போட்டு கழுவுதல் மட்டுமன்றி வைரஸ் தொற்றுகள் பரவாமல் இருக்க சானிட்டைசர் பயன்படுத்துவதும் மிகவும் அவசியம் என அறிவுறுத்தப்படுகிறது.

தற்போதைய சுகாதார அவசரத்தால் மாஸ்க் மற்றும் சானிடைஸர்களுக்கான பற்றாக்குறையும் இருந்து வருவதால் அதை வீட்டிலேயே எப்படித் தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்.

தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள் :

ஐசோபுரொப்பைல் ரப்பிங் ஆல்கஹால் (Isopropyl rubbing alcohol)-161 மில்லி லிட்டர்.

கற்றாழை ஜெல் – 79 மில்லி லிட்டர்.

வாசனை எண்ணெய் – ஒரு துளி

செய்முறை விளக்கம் :

சானிடைஸர் செய்யத் தயாராகும் முன் கைகளை நன்கு சவக்காரமிட்டு கழுவுங்கள்.

ஒரு பவுல் மற்றும் ஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றை நன்கு கழுவிக் கொள்ளுங்கள்.

அந்த பவுல் நன்குக் காய்ந்து தண்ணீர் துளிகள் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். பவுலில் ஆல்கஹால் மற்றூம் க கற்றாழை ஜெல்லையும் சேர்த்து இரண்டும் சீராகக் கலந்திருக்கும் படி நன்குக் கலக்குங்கள்.

தேவைப்பட்டால் வாசனைக்காக ஒரு துளி வாசனை எண்ணெய் ஊற்றிக் கொள்ளலாம். தற்போது மூன்றையும் நன்கு கலக்க வேண்டும். பின் ஸ்பிரே பாட்டிலில் அதை ஊற்றி மூடியால் நன்கு மூடிக்கொள்ளுங்கள்.

இப்போது ஹாண்ட் சானிடைஸர் தயார். உங்களின் கைகளை கழுவினாலும் கூட பல இடங்களில் பல பொருட்களையும் கடந்து செல்ல வேண்டியிருப்பதால், இத்தகைய சானிட்டைசரை கைகளில் தேய்த்துக்கொள்வது சிறந்த‌ பலனை தரும்.

கவனிக்க வேண்டியவை:
ஆல்கஹால் 99 சதவீதமும் கற்றாழை 1 சதவீதமும் இருக்க வேண்டும். எனவே அளவுகளில் கவனம் அவசியம்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇது பாடியா! இல்ல‌ ரப்பரா! படு சூடான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த குட்டி குஸ்பு!
Next articleகொரோனா வைரஸ் ஒருவரது உடலில் தொற்றிக்கொண்டால் எத்தனை நாட்கள் உயிருடன் இருக்கும்? மருத்துவர்களின் புதிய தகவல்! அவதானம் மக்களே!