யாழ்ப்பாணம் பருத்தித்துறை, மந்திகை அம்மன் கோயில் பகுதியில் ஒருவர் தனக்குத் தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் இன்று காலை 08 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு தனக்குத் தானே தீமூட்டி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் யார் என இது வரை இனங்காணப்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் சம்பவத்தையடுத்து அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக அம்புலன்ஸுக்கு அறிவித்து தற்கொலைக்கு முயற்சித்த நபரை வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: