கொழும்பு யாழ்ப்பாண பயணிகளின் கட்டாய கவனத்திற்கு! படித்து விட்டு நண்பர்களுக்கு பண்ணுங்க

0

டால்பின் ஹென்ஸ வானில் இரவு நேரத்தில் பயணிப்பவர்கள் நீங்கள்? உங்களுடைய பயணத்தின் போது கவனிக்க வேண்டிய சில விடயங்கள் 1. அடிக்கடி இந்த வானில் பயணிப்பவர்களுக்கு விபத்துக்கள் நடைபெறுகிறது. இதற்கு காரணம் சாரதி மட்டும் அல்ல, நீங்கள் எடுக்கும் சில அவசர தீர்மானங்களும் தான். அத்துடன் உங்கள் தீர்மானங்ககளை எடுக்கும் போது இதனால் வரும் பின் விளைவுகளை கொஞ்சமும் நீங்கள் சிந்திப்பதில்லை.

2. வாகனத்தை காயார் பண்ணும் போது வாகன சாரதி யார் என்று பாருங்கள் அத்துடன் இரவு நேர பயணம் என்றால் ஏற்கனவே அவர் இந்த ரூட் இல் இரவில் ஓடிய அனுபவம் உள்ளவரா ? அத்துடன் தொடர்ச்சியாக ஓடுபவரா என்று பாருங்கள். ஏனெனில் அனுபவம் உள்ளவர் தான் நித்திரை இல்லாமல் ஓடமுடியும். இதுதான் மிகமுக்கியமான ஒன்று. வான் நிலை ஐ விட சாரதி நிலை ஐ பார்க்க வேண்டும்

3. வாகனத்தை கையர்பண்ணுவார்கள் நீங்கள் அதனால் வாகன சாரதியை உங்கள் கட்டுப்பாடிற்குள் வைத்திருக்க வேண்டும். சாரதி சொல்லுவற்கெல்லாம் தலை ஆட்ட கூடாது.
உதாரணமாக அவர் அடிக்கடி மொபைல் கதைப்பவராக இருந்தால் நாம் அதை கட்டுப்படுத்த அறிவுறுத்த வேண்டும்

4. அதிகூடிய வேகம் என்ற ஒன்று உண்டு எனவே அதை தாண்டி போகிறாரா என்று பார்க்க வேண்டும்.

5. கூடுதலாக எந்த வான் சாரதியும் இரவு நேரத்தில் தான் பயணிக்க ஆசைப்படுவான் ஏனெனில் அவனுக்கு ட்ரிவிங் செய்வது மிகவும் இலகு. ஆனால் இங்கே தான் ஆபத்து இருக்கு, ரோட் இல் வாகன நெரிசல் இரவு நேரங்களில் மிகவும் குறைவு இதனால் இந்த சூழ்நிலை சாரதி ஐ நித்திரை கொள்ள வழி வகுக்கும்.

6. பயணிக்கும் நேரம்? பொதுவாக கடுமையாக நித்திரை தூங்கும் நேரம் அதிகாலை 2 மணி தொடக்கம் 5 மணி வரை எனவே எமது பயணத்தை மாலை ஒரு 5 மணி அளவில் தொடங்கினால் நாம் யாழ்ப்பாணத்தை அல்லது கொழும்பை அதிகாலை 2 மணியளவில் அல்லது அதற்க்கு முன்னர் அடையலாம்.
அல்லது அதிகாலை 3 அல்லது 4 மணியளவில் தொடங்கினால் பகல் 12 மணிக்கு முதல் எமது இடத்தை அடையலாம்.அடிக்கடி தேநீர் அருந்த அல்லது வோஷ் ரூம் போக என வாகனத்தை நிறுத்தி செல்லுங்கள்.

இதனால் விபத்துக்கள் குறைய வாய்ப்புண்டு. அத்துடன் திடீர் திடீர் என முளைக்கும் புதிய van உரிமையாளர்களும van சாரதிகளும். வெளிநாட்டில் இருந்து காசு வருமானால் எல்லாரும் யோசிக்கும் இலகு தொழில் இந்த வான் ஓட்டம் இதைவிட இது இப்பொழுத வெளிநாட்டுகாரனின் இன்வெஸ்ட்மென்ட் ஆக்கிவிட்டுது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதற்கொலை செய்து கொண்டவர்களின் ஆன்மாவிற்கு என்ன நடக்கிறது என்று தெரியுமா!
Next articleஆரோக்கியமான நுறையீரலை தாக்கும் நியூமோனியா பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!