பாலியல் வன்கொடுமைகள் பெண்களுக்கு எதிராக பல இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு போராடினால் மட்டும் தீர்வு கிடையாது அதற்கான சட்டங்கள் வலுவாக இருக்க வேண்டும் என்று பலரின் கருத்தாக உள்ளது.
இந்நிலையில் பெண்களுக்கு நடக்கும் உண்மைகளை வெளிகாட்டிய படம் அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’. பலராலும் பாராட்டப்பெற்ற இப்படத்தில் நடித்த நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் சில கருத்துகளை கூறியுள்ளார். பெண்களுக்கு எதிராக தவறான நோக்கத்தில் பேசினாலும், நடந்துகொண்டாலும் அது பாலியல் வன்கொடுமை தான்.
தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லையை சில பெண்கள் வெளியில் சொல்வது கிடையாது. ஏனென்றால் அதை சொன்னால் இந்த சமுகம் எப்படி நடத்தும், பேசுவார்கள் என்பதை தாண்டி புகாரளித்தால் அந்த வழக்கு முடிவதற்குள் அப்பெண்ணிடன் பல மோசமான கேள்விகளையும் கேட்பார்கள். இந்த பார்வை எப்போது மாறப்போவது என்பது தெரியவில்லை.
மேலும் என் தாத்தா பாட்டிற்கு 15 குழந்தைகள், என் அப்பா அம்மாவிற்கு இரண்டு குழந்தைகள். அதனால் ‘நான் குழந்தையே பெத்துக்கொள்ள மாட்டேன்’ என்று கூறியுள்ளார். குழந்தையை பெற்று கொடுப்பதுதான் பெண்களின் தகுதி என்று முடிவு எடுக்கிறார்கள். இப்படி பெண்களை அசிங்கப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.