கீல்வாதம் வாத நோய் கை கால் வீக்கம் குணமாக இயற்கையான‌ பாட்டி வைத்தியம் !

0
1782

அறிகுறிகள்:
வாதம்,
கை,கால் வீக்கம்.

தேவையானவை:
வெண்கடுகு.

செய்முறை:
வெண்கடுகை எடுத்து அரைத்து உடலில் பூசி வர வாதசம்பந்தமான நோய்கள் குறையும்.

அறிகுறிகள்:
கீழ்வாதம்.

தேவையானவை:
கத்தரிக்காய்,
ஆமணக்கு எண்ணெய்,
பூண்டு,
உப்பு,
சீரகம்,
கொத்தமல்லி தூள்,
மஞ்சள் தூள்.

செய்முறை:
கீழ்வாதம் இருப்பவர்கள் இரண்டு சிறிய கத்தரிக்காயை எடுத்து மிதமாக சுட்டு பிசைந்து பிறகு ஆமணக்கு எண்ணெய் விட்டு பிசைந்த கத்தரிக்காயை போட்டு அதனுடன் சிறிது சீரகம், கொத்தமல்லி தூள், மஞ்சள் தூள், பூண்டு மற்றும் உப்பு போட்டு நன்கு வதக்கி கூட்டு போல செய்து தொடர்ந்து 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் கீழ்வாதம் குறையும்.

அறிகுறிகள்:
கீழ்வாதம்.

தேவையானவை:
கேரட் சாறு,
வெள்ளரிக்காய் சாறு,
பீட்ரூட் சாறு.

செய்முறை:
100 மி.லி கேரட் சாறு எடுத்து அதில் 25 மி.லி வெள்ளரிக்காய் சாறு மற்றும் பீட்ரூட் சாறு கலந்து தினந்தோறும் குடித்து வர கீல்வாதம் குறையும்.

அறிகுறிகள்:
கீழ்வாதம்

தேவையானவை:
சேலாப்பழம்(cherry fruit).

செய்முறை:
கால்களை சேலாப்பழத்தின் சாறுகளில் 25 நிமிடம் ஒரு நாளைக்கு இரண்டு முறை வைத்திருக்க வேண்டும். மேலும் 15 பழங்களை சாப்பிட்டு வந்தால் கீல்வாதத்திற்கு மிகவும் சிறந்தது.

அறிகுறி:
கீழ்வாதம்.
தேவையானவை:
உருளைக்கிழங்கு.

செய்முறை:
குளிர்ந்த நீரில் உருளைக்கிழங்கு சாறு மற்றும் உருளைக்கிழங்கை துண்டுகளாக வெட்டி போட்டு இரவு முழுவதும் வைத்து காலையில் மட்டும் அந்த நீரை அருந்தி வந்தால் வாதம் குறையும்.


குறிப்பு:
கீழ்வாதம் இருப்பவர்களுக்கு மிகவும் சிறந்தது.

அறிகுறிகள்:
வாத‌ நோய்.

தேவையானவை:
பால்.
விளக்கெண்ணெய்.

செய்முறை:
வெதுவெதுப்பான பாலுடன் ஒரு டேபிள்ஸ்பூன் விளக்கெண்ணெய் கலந்து இரவில் குடித்தால் வாதத்தை குறைக்கலாம்.

அறிகுறிகள்:
வாதம்.

தேவையானவை:
எலுமிச்சைச்சாறு.
கரும்புச்சாறு.
நெய்.
இஞ்சிச்சாறு.

செய்முறை:
அரை டேபிள்ஸ்பூன் இஞ்சிச்சாறு, அரை டேபிள்ஸ்பூன் எலுமிச்சைச்சாறு, நெய் மற்றும் சிறிதளவு கரும்பு சாறு ஆகியவை சேர்த்து குடித்து வந்தால் வாதம் குறையும்.

அறிகுறிகள்:
வாதம்.

தேவையானவை:
அம்மான் பச்சரிசி.

செய்முறை:
அம்மான் பச்சரிசி கீரையை அரைத்து தினமும் சிறிதளவு சாப்பிட்டு வந்தால் வாதம் குறையும்.

அறிகுறிகள்:
வாத கோளாறு.

தேவையானவை:
இஞ்சி சாறு,வெல்லம்.

செய்முறை:
இஞ்சிசாறுடன் வெல்லம் கலந்து சாப்பிட்டு வந்தால் வாத கோளாறுகள் குறையும்.

அறிகுறிகள்:
வாதம்,

தேவையானவை:
கடுகு,
முருங்கை பட்டை.

செய்முறை:
முருங்கை பட்டையை, கடுகுடன் சேர்த்து அரைத்து பற்று போட்டு வந்தால் வாத நோய் குறையும்.

அறிகுறிகள்:
கை, கால் செயலிழத்தல்,
கை, கால் இழுத்து வைத்தல்.
தேவையானவை:
சங்கிலை வேர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: