கல்லீரல் நோயை குணமாக்கும் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற அகில் புகை!

0

கல்லீரல் நோயை குணமாக்கும் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற அகில் புகை!

கல்லீரல் நோய்களை குணமாக்கும்

கல்லீரலில் பித்த நீரைப் பெருக்கும் ஆற்றல் கொண்ட அகில் கட்டையை நன்றாகக் கொளுத்தி சிறிது எரிந்த பின்னர் அந்த நெருப்பை ஊதி அணைத்துவிட்டு அதிலிருந்து வரும் புகையை மட்டும் மூக்கு மற்றும் வாய் வழியாக உள்ளுக்கு இழுக்கும் போது கல்லீரல் தொடர்பான வியாதிகள் குணமடைவதுடன், வாந்தியும் நின்றுவிடும்.

வீக்கத்தை குறைக்கும்

உடலில் எந்தவொரு பகுதியில் வீக்கம் காணப்பட்ட போதிலும் அதனைக் இலகுவில் குறைக்கும் சக்தி கொண்ட அகில், உடல் சோர்வினை உடனே நீக்குவதுடன், பொதுவான வாத நோய்கள், ஒற்றைத் தலைவலி, வாந்தி, மண்டையிடி, சில வகைக் காய்ச்சல்கள், படை மற்றும் சரும நோய்கள் போன்ற பலதரப்பட்ட நோய்களை குணப்படுத்தும் ஆற்றலினையும் கொண்டுள்ளது.

கட்டமைப்பு உடலுக்கு அகில்

அகில் மரக்கட்டையை பசும்பால் விட்டு நன்றாக சந்தனம் அரைப்பது போல அரைத்து அந்த விழுதை உடலில் தொடர்ந்து பூசி வரும் போது சருமத்தின் சுருக்கம் நீங்குவதுடன், ஊளைச்சதை எனப்படும், அதிகளவான சதை கொண்ட உடலினைக் கொண்டவர்கள் இந்த அகில் கட்டை விழுதை தொடர்ந்து உடலில் பூசி வரும் போது மேலதிக சதை குறைவடைந்து நன்கு இறுகிய உடல் கட்டமைப்பாகக் காட்சியளிக்கும். அதேபோல இதனை சரியான விதத்தில் மருத்துவப் பக்குவம் செய்து சாப்பிட்டு வரும் போது நரை மற்றும் திரை போன்ற முதுமைக் கால சருமக் குறைபாடுகள் நீங்கி சருமம் மிகவும் மிருதுவாகவும், பளபளப்பாகவும் காணப்படும்.

கல்லீரல் நோயை குணமாக்கும் அகில்புகை

மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றதும், காடுகளில் பல இடங்களில் சந்தன மரத்தை ஒட்டி வளர்ந்திருக்கக் கூடியதுமான அகில் மரத்தின் கட்டை மட்டுமன்றி ஒட்டு மொத்த மரமுமே பலவித நோய்களை குணப்படுத்தக்கூடிய சந்தன மரவகையை சேர்ந்த ஒன்றாக காணப்படுகின்றது.

சுவாச கோசத்தில் ஏற்படக் கூடிய அழற்சியும் சமன்படுவதுடன், உடலில் காயங்கள் ஏற்பட்டிருந்தால் அதன்மீது அகில் புகைபடுமாறு செய்யும் போது காயம் வெகு விரைவில் குணமாடையும். மேலும், அகில் கட்டை தைலம் மூக்கு, தொண்டை, காது போன்ற உறுப்புக்களில் உட்புறத்தில் ஏற்படக் கூடிய பல நோய்களை குணப்படுத்துவதுடன், தலைவலியையும் குணமாக்கும்.

அகில் மூலிகை பயன்கள்

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசளித் தொந்தரவு, மூச்சு உறுப்புகளின் நோய்களை நீக்கும்செயல்திறன் மிக்க வேதிப்பொருள் திப்பிலி!
Next articleபால் உணர்வுகளைத் தூண்டி தாம்பத்யத்தை இதமாக்கும் வெங்காயம்!