Agil payangal அகில் பயன்கள் Agil maruthuva payangal அகில் மருத்துவ பயன்கள் Agil mooligai payangal அகில் மூலிகை பயன்கள் Akil Payangal

0

Agil payangal அகில் பயன்கள் Agil maruthuva payangal அகில் மருத்துவ பயன்கள் Agil mooligai payangal, அகில் மூலிகை பயன்கள். Agil payangal அகில் இலை, அகில் கட்டை, அகில் புகை, அகில் செடி, அகில் மரம், மூலிகை சாம்பிராணி, Agil benefits in tamil, Aquilaria Agallocha health benefits. agil plant, Akil Payangal அகில் பூ, அகில் பட்டை அகில் வேர்.Agil Kattai, Patti Vaithiyam, siddha vaithiyam. Neotea Agil

Agil payangal

அகில் மூலிகை மருத்துவ பயன்கள்

“நாசியடைப்பு நவிரவிடி தாளுநோய்
வீசு நமைப் புடைகள் விட்டேகும் – பேசில்
சுகுரு மயங் குந்துனை முலையாய் ! நல்ல
அகரு மரத்தாலறி
தளர்ந்தவி ருத்தருக்காந் தக்க மணத்தால்
உளைந்த சுரமனைத்து மோடும் – வலிந்திகழ
மானே ! அகிற்புகைக்கு வாந்திய ரோசகம் போம்
தானே தளர்சியறுஞ் சாற்று”

என்கிறது சித்தர் பாடல்

அகில் கட்டை

அகருக் கட்டையினால் சிலவகையான காய்ச்சல்கள், பீனிசம், வாதம், நமைப் புடைகள், தலைக் குத்து ஒற்றைத்தலைவலி வாந்தி மற்றும் அருசி அயர்வு ஆகிய பிரச்சினைகள் எம்மை விட்டு; நீங்குவதுடன், முதுமையிலும் உடலை இறுக்கி பலப்படுத்தும்.

வயதான காலங்களில் உடலில் ஏற்படும் தோல் சுருக்கங்கள் அதைப்பு அதாவது தேவையற்ற வீக்கங்களிலிருந்து விலகி இறுக்கமான உடலமைப்பினைப் பெறுவதற்கு அகிற் கட்டையை போதியளவான தண்ணீர் கலந்து சந்தணம் போல் அரைத்து உடலில் பூசிக்கொண்டு வருதல் வேண்டும்.

இதன் சிறப்பான நறுமணத்தினாலும்; இதன் சூடேற்றும் செயலாலும் இதனை சிலவகையான சுரநோய்க்கான காசயங்களில் சேர்த்து தரப்படுகின்றது.

அகிர்கட்டையை தனித்தோ அல்லது சந்தனக் கட்டை, கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, தேவதாரு, கார்போக அரிசி, பூலாங்கிலங்கு, வெட்டிவேர் மற்றும் விலாமிச்சம்வேர் போன்ற ஏனைய கடைச் சரக்குகளுடன் சேர்த்தோ ஒன்றிரண்டாக இடித்து டிபாடியாக்கி, நெருப்பில் போட்டு புகை உண்டாக்கி அதை குழந்தைகள் தலைக்கு நீர் விட்டு குளிப்பாட்டிய பின் காட்டுவது நம் பெரியோரின் வழக்கமாகும். இதன் மூலம் சளி, தலையில் நீர் ஏற்றம், தலைபாரம் மற்றும் சில கண்ணுக்கு தெரியாத அளவிலான கிருமித் தொற்றுக்கள் என்பன நீங்கும். அதேவேளை, இதன் புகையால் வீட்டில் காலை, மாலை புகை போடும் போது கொசு போன்ற பூச்சிகளின் தொல்லையிலிருந்து விலகியிருக்க முடியும்.

அகில் பொடி

பொதுவாக இதன் சூரணம் தரப்படுவது இல்லையானாலும், சில தாது பலத்திற்குரிய மருந்துகளுடன் சேர்க்கப்படுகின்றது என்பது வெளிப்படை. மேலும், இதனைப் பயன்படுத்தி தலைமுடிக்கான தைலம் உற்பத்தி செய்யப்படுகின்றது.

சந்தனக் கட்டைக்கு அடுத்ததாக மருத்துவ உலகிலும், மக்கள் மத்தியிலும் செல்வாக்குப் பெற்ற ஒன்றாக அகில் காணப்படுகின்றது. பல்வேறுபட்ட நோய்களைக் குணப்படுத்தும் இயல்பு கொண்ட இது மிகவும் மலிவாகப் பெறக்கூடிய ஒன்றாக உள்ளது குறிப்பிட தக்கது. அகில் சந்தனமர வகையைச் சேர்ந்த மர வகைகளில் ஒன்றாக காணப்படுகின்ற வகையில் காடுகளில் பல இடங்களில் சந்தன மரத்தை ஒட்டியே அகில் மரங்களும் வளர்ந்திருப்பதனைக் காண முடியும்.

சருமத்தின் சுருக்கங்களை நீக்குவதற்கு அகில் கட்டையை பசுவின் பால்விட்டு நன்றாக சந்தனம் அரைப்பது போல நன்க பட்டு போல அரைத்து அந்த விழுதை சருமத்தில் தொடர்ந்து பூசி வருதல் வேண்டும். ஊளைச்சதை எனப்படும், அதிகளவான தேவையற்ற சதையடைய உடலினை உடையவர்கள் இந்த அகில் கட்டை விழுதினை தொடர்ந்து உடலில் பூசி வந்தால் தேவையற்ற சதை குறைவடைந்து சதை இறுகி உடல் நல்ல கட்டமைப்பாகக் காட்சியளிக்கும். இதனை சரியான முறையில் மருத்துவப் பக்குவம் செய்து உட்கொண்டால் நரை, திரை போன்ற முதுமைக் கால சருமக் குறைபாடுகளையும் அகற்றி சருமத்தை மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.

அகில் மரம்

உடலில் வெப்ப உணர்வைத் தோற்றுவித்தல், கல்லீரலில் பித்த நீரைப் பெருக்குதல் மற்றும் உடலில் எந்தப் பகுதியில் வீக்கம் இருந்தாலும் அதனைக் குறைத்தல் ஆகிய ஆற்றலுடைய அகில், அம்மரத்தின் கட்டை மட்டும்தான் மருத்துவச் சிறப்பு பெற்றுத் திகழ்கிறது என்பது இங்கு குறிப்பிடதக்கது.

உடலில் எந்தப் பகுதியில் வீக்கம் இருந்தாலும் அதைக் குறைக்கும் சக்தி கொண்ட அகில், உடல் சோர்வினை உடனே நீக்கி, பொதுவான வாத நோய்கள், படை மற்றும் சரும நோய்கள், வாந்தி, ஒற்றைத் தலைவலி, மண்டையிடி மற்றும் சில வகையான காய்ச்சல் போன்ற நோய்களை குணப்படுத்த கூடியதாகும்.

ஒற்றைத் தலைவலி, மண்டையிடி, சில வகைக் காய்ச்சல், பொதுவான வாத நோய்கள், படை மற்றும் சரும நோய்கள், வாந்தி மற்றும் அருசி ஆகிய குறைபாடுகளை அகற்றும் ஆற்றல் பெற்றதாகத் திகழ்கின்ற அகிலினை முறைப்படி மருத்துவப் பக்குவம் செய்து உட்கொள்ளும் போது உடல் அயர்வினை உடனே போக்கி, நரை மற்றும் திரை போன்ற முதுமைக் கால சருமக் குறைபாடுகளையும் அகற்றி சருமத்தை மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகின்றது.

அகில் கட்டையை நன்றாகக் எரிய வைத்து சிறிது எரிந்த பின்னர் நெருப்பை ஊதி அணைத்துவிட்டு அதிலிருந்து வரும் புகையை மட்டும் மூக்கு மற்றும் வாய் வழியாக உள்ளுக்கு இழுத்தால் கல்லீரலில் பித்த நீரைப் பெருக்குவதுடன் கல்லீரல் தொடர்பான வியாதிகளும் குணமாகிவிடும். மேலும், வாந்தி ஏற்படும் பொழுது இவ்வாறு புகை பிடித்தால் வாந்தி கட்டுப்படுத்தப்படுவதுடன், உடலில் காயங்கள் ஏற்பட்டிருந்தால் அதன்மீது அகில் புகைபடுமாறு செய்தால் காயம் வெகு விரைவில் குணமாகிவிடும்.

சுவாச கோசத்தில் ஏற்படக் கூடிய அழற்சியை சமன்படுத்தப்படுவதுடன் அகில் கட்டை தைலம் மூக்கு, தொண்டை, காது போன்ற உறுப்புக்களில் உட்புறத்தில் ஏற்படக் கூடிய பல நோய்களை அகற்றுவதுடன், தலைவலியையும் குணமாக்குகின்றது.

அகில் கட்டை தைலம் தயாரிக்கும் முறை:

அகில் மூலிகை கட்டையைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு நறுக்கப் பட்ட துண்டுகளை 300 கிராம் அளவு சேகரித்து 2 லிட்டர் தண்ணீரில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும்.

தண்ணீர் ஒரு லிட்டராக சுண்டக் காயச்சிய பின்னர் இறக்கி வடிகட்டி, ஆற வைத்துக் கொள்ளல் வேண்டும். அவ்வாறு பெறப்பட்ட நீருடன் ஒரு லிட்டர் பசும்பால், ஒரு லிட்டர் நல்லெண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு காய்ச்ச வேண்டும். அடுப்பிலிருக்கும் சாறு சுண்டும் போது, அதில் 30 கிராம் அதிமதுரம், 30 கிராம் தான்றிக்காய்; தூள் போட்டுப் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ளல் வேண்டும். இந்த தைலத்தை பாதிக்கப்பட்ட உறுப்;புகளின் உள்ளே விட்டு வருதல் அல்லது மேற்பூச்சாகவும் பூசுதல் அல்லது எண்ணெய்க் குளியல் போல செய்தல் மிகச் சிறப்பான பலனைத் தரும்.

கல்லீரல் நோயை குணமாக்கும் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற அகில் புகை!

Patti Vaithiyam in Tamil with the all maruththuva Kurippukkal: Siddar Maruththuvam, Paati Vaithiyam Tamil Maruththuvam

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

Article By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleThirukkural Pirivatramai Adhikaram-116 திருக்குறள் பிரிவாற்றாமை அதிகாரம்-116 கற்பியல் காமத்துப்பால் Karpiyal Kamathupal in Tamil
Next articleThirukkural Alararivuruthal Adhikaram-115 திருக்குறள் அலரறிவுறுத்தல் அதிகாரம்-115 களவியல் காமத்துப்பால் Kalaviyal Kamathupal in Tamil