இவருடன் குடும்பம் நடத்தமாட்டேன்! அடம் பிடித்த மனைவிக்கு கணவனால் ஏற்பட்ட விபரீதம்!

0
325

குடிகார கணவனுடன் குடும்பம் நடத்த வரமாட்டேன் என்று கூறிய மனைவியை கணவனே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள மல்லூர் அருகே வெடிக்காரன்புத்தூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள நாயக்கன்பட்டி என்னும் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணி. இவர் மரம் வெட்டும் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த தங்கமணி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாலசுப்பிரமணிக்கு அளவுக்கு அதிகமாக குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த பழக்கத்தினால் இருவருக்கும் இடையே பல்வேறு தகறாறுகள் நிகழ்ந்துள்ளன. பலமுறை தங்கமணி தன் கணவரிடம் சண்டை போட்டுவிட்டு தன் தாயாரின் வீட்டிற்கு சென்று விடுவார்.

பின்னர் அவரை சமாதானப்படுத்தி பாலசுப்ரமணி தன் வீட்டிற்கு அழைத்து வருவார். இதுபோன்ற சம்பவமானது நிறைய முறை நிகழ்ந்துள்ளன. இரண்டு மாதங்களுக்கு முன்னர் மல்லூர் காவல்நிலையத்தில் பாலசுப்ரமணி மீது தங்கமணி புகார் அளித்துள்ளார். பின்னர் காவல்துறையினர் இருவரையும் வரவழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

2 நாட்கள் முன்னர் கணவன் மனைவியிடையே மீண்டும் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டன. மனமுடைந்த தங்கமணி தன் தாயாரின் வீட்டிற்கு சென்று விட்டார். பாலசுப்ரமணி தங்கமணியின் வீட்டிற்கு சென்று மீண்டும் தவறு செய்யமாட்டேன் என்று கூறி அழைத்துள்ளார். இதனை ஏற்க மறுத்த தங்கமணி இவருடன் குடும்பம் நடத்த மாட்டேன். குடிகாரனுக்கு முந்திவிரிக்கமாட்டேன் என்று கூறி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலசுப்ரமணி அரிவாளால் தங்கமணியை வெட்டியுள்ளார்.

ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பாலசுப்பிரமணி வெளியில் வந்தார். அலறியடித்துக்கொண்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் வழியிலேயே பாலசுப்ரமணி இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

இந்த தகவல் அறிந்த மல்லூர் காவல்துறையினர் பாலசுப்ரமணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதிருமணமான 23 நாட்களிலேயே லெஸ்பியன் பார்ட்னருடன் ஓடிச்சென்ற இளம்பெண்! வெளியான திடுக்கிடும் தகவல்!
Next articleஆண் நண்பருடன் ஆபாசமாக நடனமாடிய பிக்பாஸ் மீரா மிதுன்! வைரலாகும் வீடியோ!