இந்த நடிகருடன் டேட்டிங் செல்ல ஆசை! ஐஸ்வர்யா ராஜேஷ்!

0

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தனியாக பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் ஹீரோயினாக நடிக்கும் அளவுக்கு வளர்த்துள்ளார். காக்கா முட்டை, கனா உள்ளிட்ட படங்கள் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளன.

இந்நிலையில் தற்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் தன் சொந்த வாழ்க்கை மற்றும் காதல் தோல்விகள் பற்றி பேசியுள்ளார்.

“நான் 12 வகுப்பு படிக்கும்போது முதல் காதல் தோல்வி ஏற்பட்டது. நான் காதலித்தவர் மற்றொரு தோழியும் என்னை ஏமாற்றினர். அதன் பின் பல வருடங்கள் கழித்து மற்றொரு காதலில் இருந்தேன், அதுவும் முறிந்துவிட்டது. தற்போது சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறேன். அடுத்த காதலுக்காக காத்திருக்கிறேன்” என கூறியுள்ளார்.

மேலும் எந்த நடிகருடன் டேட்டிங் போக விரும்புவீர்கள் என கேட்டதற்கு, தோனி பயோபிக்கில் நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புட்டுடன் டேட்டிங் செல்ல விருப்பம் என தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்தியன்-2 கமல்-ஷங்கர் சம்பளம் இவ்வளவு கோடியா! புதிய உச்சம்!
Next articleதளபதி விஜய் கூறிய இந்த அறிவுரை தான் என்னை ஹீரோவாக்கியது! நடிகர் ஜெய்!