அப்பாவை குழந்தை போன்று பார்த்து கொள்ளும் 6 வயது மகளின் நெகிழ்ச்சி சம்பவம்!

0
379

சீனாவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் தந்தையை அவரது ஆறு வயது மகள் கண்ணும் கருத்துமாய் பார்த்து கொள்ளும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் Ningxia மாகணத்தை சேர்ந்த சிறுமி தான் Jia Jia. 6 வயதான இவர் தினந்தோறும் காலையில் 6 மணிக்கு எல்லாம் எழுந்து தன்னுடைய தந்தையான Tian Haicheng-க்கு சுமார் அரைமணி நேரம் மசாஜ் செய்கிறார்.

அதன் பின் அப்பாவுக்கு பல் துலக்கிவிடுவது, குளிப்பாட்டி விடுவது போன்ற வேலைகளை பள்ளிக்கு செல்வதற்கு முன்பு செய்து முடித்துவிடுகிறார்.

அதன் பின் மாலை வீட்டிற்கு திரும்பியதும், அப்பாவுக்கு இரவு நேர டின்னர், பின்னர் சிறிது நேரம் வெளியில் அழைத்து செல்வது போன்று உதவுகிறார்.

இந்த சிறுமி குறித்து உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இவரின் தந்தையான Tian Haicheng கார் விபத்தில் சிக்கினார்.

திடீரென்று ஏற்பட்ட இந்த விபத்தின் காரணமாக அவருக்கு பக்கவாதம் வந்தது. இதையடுத்து இவரின் மனைவி கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பு இவரை விட்டுச் சென்றார். ஆனால் உடன் செல்லும் போது, தன்னுடைய மூத்த மகனை அழைத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில் இந்த தம்பதியின் மகள் Jia Jia, அம்மா இறந்த போதும் பக்காவாதத்தினால் பாதிக்கப்பட்ட தந்தையை ஒரு குழந்தை போன்று பார்த்து கொள்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், முதலில் அப்பாவிற்கு எப்படி ஷேவ் செய்ய வேண்டும் என்று தெரியவில்லை, இதனால் அவரின் முகத்தில் காயம் ஏற்பட்டு இரத்தம் கூட வந்தது.

ஆனால் தற்போது மிகவும் அழகாக ஷேவ் செய்கிறேன். என்னுடைய 40 வயது தாத்தா மற்றும் பாட்டி இருவரும் நீ சுத்தமாக அப்பாவிற்கு ஷேவ் செய்துள்ளாய் என்று கூறினர்.

அம்மாவை மிஸ் செய்கிறீர்களா என்று கேட்ட போது, இல்லை அப்பாவை பார்த்து கொள்வதற்கே நேரம் சரியாக இருக்கிறது. ஆனால் என்னுடைய சகோதரனை மிகவும் மிஸ் செய்கிறேன், ஏனென்றால் அவனிடம் பேசுவதற்கு, விளையாடுவதற்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை என்று சிறுமி கூறியுள்ளார்.

சிறுமியான Jia Jia-வை Kuaishou என்ற ஆப்பில் சுமார் 480,000 பின்பற்றுகின்றனர். அவரின் இந்த செயலைக் கண்டு பலரும் நீ ஒரு குட்டி தேவதை என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: