மொட்டை மண்டையில கூட முடி வளர வைக்கணுமா! இந்த இரண்டு பொருளையும் தேய்ங்க! கிடு கிடுனு வளரும்

0

முடி உதிர்தல் பிரச்சினை பொதுவாக எல்லாருக்கும் இருக்கும் ஒரு தலையாய பிரச்சினை. இதனுடன் பொடுகு, தலை அரிப்பு போன்றவையும் தொற்றிக் கொள்ளும்.

சில பேருக்கு முடி உதிர்தல் ஏற்பட்டு வழுக்கை கூட அந்த இடத்தில் ஏற்பட்டு விடும்.

உங்கள் வீட்டில் இருக்கும் சில பொருட்களை நீங்கள் பயன்படுத்தினாலே போதும் பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும்.

முடி உதிர்தல் பிரச்சினைக்கு பிறகும் உங்கள் கூந்தல் வளர்ச்சியை தூண்ட கீழ்க்கண்ட பொருட்கள் பயன்படுகிறது.

  • வெங்காயம்
  • கறிவேப்பிலை
வெங்காயம்

வெங்காயத்தில் உள்ள அதிகப்படியான சல்பர் நமக்கு முடி வளர்ச்சியை தூண்டுகிறது. இது தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து நீண்ட அடர்த்தியான மற்றும் வலிமையான கூந்தலை பரிசளிக்கிறது.

பயன்படுத்தும் முறை

வெங்காயத்தை நன்றாக அரைத்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். அந்த பேஸ்ட்டை தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்யுங்கள். ஒரு மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும். பிறகு மைல்டு சாம்பு கொண்டு தலைமுடியை அலசி விடுங்கள்.

கறிவேப்பிலை
  • முடி உதிர்தல் பிரச்சினையை போக்கி முடி வளர்ச்சியை தூண்டவும் செய்கிறது. இதில் உள்ள அமினோ அமிலங்கள் கூந்தலின் வலிமையை கூட்டுகிறது.
  • பயன்படுத்தும் முறை காய வைத்த கறிவேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய் இரண்டையும் எடுத்து கொள்ளுங்கள்.
  • நன்றாக கலந்து பேஸ்ட்டாக்கி தலையில் தடவிக் கொள்ளவும். 1/2 மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். ஒரு மாதத்திலேயே நல்ல பலன் கிடைக்கும்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்! நடிகை கியாரா அத்வானி!
Next articleஉங்க எடை சும்மா விறுவிறுனு குறையனுமா! பரம்பரை குண்டா நீங்க! இந்த ஒரு சீக்ரெட்ட தெரிஞ்சுக்கோங்க!