உங்களுக்கு சிறு-நீர் கழிக்கும் போது எரிச்சலாக இருக்கிறதா? ஒழுங்கற்ற சிறு-நீர், துவாரத்தில் எரிச்சல் என்பவற்றிற்கு சிறந்த மருத்துவம் !

0

உங்களுக்கு சிறு-நீர் கழிக்கும் போது எரிச்சலாக இருக்கிறதா? ஒழுங்கற்ற சிறு-நீர், துவாரத்தில் எரிச்சல் என்பவற்றிற்கு சிறந்த மருத்துவம் !

கானாம்வாழைக் கீரையை அரைத்துச் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குறையும்.

பருப்புக் கீரையின் தண்டை அரைத்து அடிவயிற்றில் பற்று போட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குறையும்.

கரும்பின் வேரை அரைத்து, அந்த சாற்றை குடித்து வந்தால் சிறுநீர் எரிச்சல் குறையும்.

ஆகாயத்தாமரை இலைகளை நன்றாக அரைத்து சாறு எடுத்து தேன் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வர நீர்ச்சுருக்கு குறையும்.

தொட்டால் சிணுங்கி இலையை நன்றாக அரைத்து பத்து கிராம் எடுத்து, காலையில் தயிருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குறையும்.

வல்லாரை இலையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நீர்க்கடுப்பு குறையும்.

வாழைத்தண்டை சுத்தம் செய்து இடித்து வடிகட்டி சாறு எடுத்து அதனை மண் சட்டியில் ஊற்றி சுடவைத்து குடித்தால் நீர் கடுப்பு குறையும்.

கோபுரந்தாங்கி, சிறுபீளை, நெருஞ்சில், வெள்ளரி விதை ஆகியவற்றை நிழலில் உலர்த்தி ஒன்றிரண்டாக இடித்து ஒரு கைப்பிடியளவு ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, அறை லிட்டராக சுண்ட வைத்து வடிகட்டி காலையும் மாலையும் உணவுக்கு முன் குடித்து வந்தால் சிறுநீர் நன்றாக வெளியேறும். சிறுநீர் எரிச்சலும் குறையும்.

ஏலக்காயையும், நெல்லிக்காயையும் சேர்த்து நன்றாக அரைத்து சாப்பிட்டு வர‌ சிறுநீர் எரிச்ச‌ல் குறையும்.

புளியம் பூவை எடுத்து தண்ணீர்விட்டு சுண்டக் காய்ச்சி வடிகட்டி பனங்கற்கண்டு கலந்து சாப்பிட்டு வந்தால் நீர்க்கடுப்பு குறையும்.

செம்பருத்தி இலைகளை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து,குடித்து வந்தால் சிறுநீர் எரிச்சல் குறையும்.

பனைமரத்தின் பூவை அடுப்பில் போட்டு நன்கு கரியாக்கி அதனை தூள் செய்து ஒரு தேக்கரண்டி அளவு தூள், அதே அளவு தேன் கலந்து காலை, மதியம், மாலை என மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்றாக இறங்கும்.

பார்லியுடன் வெண்டைக்காய் விதையை போட்டு தண்ணீர் விட்டு சுண்டக் காய்ச்சி காலையும் மாலையும் குடித்து வந்தால் நீர்கடுப்பு குறையும்.

ஆவாரம் பூவை பாலுடன் சேர்த்து காய்ச்சி தேன் கலந்து காலையும் மாலையும் குடித்து வந்தால் நீர்கடுப்பு குறையும்.

வெங்காயத்தாளுடன் ஒரு டீஸ்பூன் பார்லியை பொடியாக்கி சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால்,சிறுநீர் எரிச்சல் குறையும்.

அன்னாசி பழத்தை சாறு பிழிந்து தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குறையும்.

பிர‌ண்டையை காய்ந்த‌ முள்ளங்கியுடன் கருக‌ வ‌றுத்து நீர் விட்டு காய்ச்சி வ‌டிக‌ட்டி இள‌ஞ்சூடாக‌ குடித்தால் சிறுநீர் எரிச்சல் குறையும்.

பசலைக்கீரை சாற்றில் பார்லி, சீரகம் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து ஊற வைத்து உலர்த்தி பொடி செய்து, அதை கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் நீர் எரிச்சல், நீர்க்கடுப்பு போன்றவை குறையும்.

கீழாநெல்லி, வல்லாரை இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக அரைத்து தயிர் சேர்த்து ஒரு டீஸ்பூன் அளவு காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் நீர்கடுப்பு குறையும்.

பனங்கற்கண்டை நன்கு பொடியாக்கி பசும்பாலில் கலந்து குடித்து வந்தால் நீர் சுருக்கு குறையும்.

எலுமிச்சைச் சாறுடன் சிறிது நல்லெண்ணெய் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் நீர்கடுப்பு குறையும்.

நன்னாரி வேர், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், வெந்தயம், மிளகு,சோம்பு மற்றும் சீரகம் ஆகியவற்றை ஒன்றாக போட்டு நன்றாக இடித்து நீர் விட்டு நன்றாக காய்ச்சி கஷாயம் போல செய்து குடித்து வந்தால் சிறுநீர் சம்பந்தப்பட்ட கோளாறுகள் அனைத்தும் நீங்கும்.

சங்கம் வேர், பட்டையை நன்றாக காய்ச்சி 20 மி.லி., சாறு எடுத்து 100 மி.லி., பாலில் கலந்து காலையில் மட்டும் குடித்து வந்தால் நீர்கடுப்பு குறையும்.

சின்ன வெங்காயம் மற்றும் கொத்தமல்லி விதை இரண்டையும் நீர் விட்டு நன்றாக காய்ச்சி காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் நீர்க்கடுப்புக் குறையும்.

வெந்தயத்தை ஊற வைத்து அதனுடன் சீரகம்,சோம்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து மோரில் கலந்து குடித்தால் நீர்க்கடுப்புக் குறையும்.

அரை டீஸ்பூன் புளியங்கொட்டை பொடியை தினந்தோறும் காலை ஒரு குவளை பாலுடன் சேர்த்து குடித்து வந்தால் நீர்க்கடுப்பு குறையும்.

எலுமிச்சங்காய் அளவு கட்டிக்கொடியிலையை அரைத்துக் கால்படி நீரில் கலக்கி அதனுடன் சீரகம், ஏலம் வகைக்கு ஒரு விராகனிடை பொடித்துப் போட்டு ஒரு துட்டெடை சீனி கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சலை குறைக்கலாம்.

நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசிறுநீர் எரிச்சல், சிறுநீரகத்தில் கல், சிறுநீரக வீக்கம், சிறுநீருடன் இரத்தம் வருதல் போன்ற சிறுநீரக‌ கோளாறுகளுக்கு சித்தர் வைத்தியம் !
Next articleToday Rasi Palan இன்றைய பஞ்சாங்கம் இன்றைய ராசி பலன் – 19.12.2019 !