வித்தியா கொலை வழக்கு குற்றவாழிகள் போகம்பரை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்படும் காட்சி.
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 7 பேரும் கடும் பாதுகாப்புடன் போகம்பரை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
குற்றவாளிகளை போகம்பரை சிறைச்சாலைக்கு மாற்றுமாறு தீர்ப்பாயம் கட்டளையிட்டிருந்தது. அதன்படி குற்றவாளிகள் சற்றுமுன்னர் கடும் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.
சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் குற்றவாளிகளை கொண்டு செல்லும் அதேவேளை யாழ்ப்பாணம் பொலிஸார் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குகின்றனர்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: