இரத்தம் அடர்த்தியாக இருந்தால் ரத்த ஓட்டம் குறைவாக இருக்கும். இதனால் இதய நோய்கள் தொடங்கி, பக்க வாதம் வரை பல பிரச்சனைகள் வரும் வாய்ப்புண்டு. நரம்புகளிலும் இதய நாளங்களிலும் இரத்தக் கட்டு ஏற்படுபவர்களுக்கு இரத்த இளக்கிகளை உண்ணுமாறு பரிந்துரைக்கப் படுகிறார்கள்.
ரத்தத்தை அடர்த்தியை குறைக்கும் வகையில் நாம் உண்ணும் உணவுகளை மாற்றிக் கொண்டால் பிரச்சனைகளை தடுக்கலாம். அவ்வாறு சில உணவுப் பொருட்கள் ரத்தத்தின் அடர்த்தியை குறைக்க்ம். அவை எதுவென பார்க்கலாம்.
1. இலவங்கப் பட்டை மற்றும் ஆவாரை :
இலவங்கப் பட்டை மற்றும் ஆவாரம் ஆகியவற்றில் காணப்படும் குமாரின் எனப்படும் வேதி பொருள் இறுகுதலை தடுக்கும் ஒரு நல்ல மருந்தாக செயல்படுகிறது. குறைந்த அளவுகளில் இவை உட்கொள்ளப்படும்போது உங்கள் இரத்த அழுத்தத்தை குறைகிறது.
இந்த நறுமணப் பொருட்களை உண்டுவருவது மூட்டுவலி மற்றும் பிற காரணங்களால் ஏற்படும் இரணங்களுக்கு அருமருந்தாக செயல்படுகிறது. எனினும் பட்டையை அதிக அளவுகளில் நீண்ட காலத்திற்கு எடுத்துக் கொள்வதால் கல்லீரல் பாதிக்கப்படலாம் என்பதால் அவ்வாறு செய்வதை தவிருங்கள்.
2. இஞ்சி
இஞ்சி அல்லது சுக்கு உணவுகளில் சுவையை கூட்ட பொதுவாகப் பயன்பட்டாலும் இரத்தத்தை இலேசாக்கவும் இது பயன்படும். இஞ்சி உங்கள் உணவில் அந்த கூடுதல் உயிரோட்டத்தை தன்னகத்தே கொண்டுள்ள மந்திர சக்தியினால் தருகிறது. இது பல உடல் கோளாறுகளையும் சரி செய்யவும் உதவுகிறது. இரத்தத்தை இலேசாக்க இஞ்சி இரணத்தை குறைத்து உடலின் நரம்புகளை ஆசுவாசப்படுத்துகிறது. இதய வலிப்பை நீங்கள் தடுக்க விரும்பினால் ஒரு சூடான சுக்கு டீ அல்லது காபியை சுவைத்து மகிழுங்கள்.
3. சிவப்பு மிளகாய்
சிவப்பு மிளகாய் இரத்தத்தை சிறந்த முறையில் இலேசாக்கி நரம்புகள் மற்றும் இதய நாளங்களில் இரத்தக் கட்டை தடுக்கும். இதில் அதிகமாக் காணப்படும் சாலீசிலேட்டுகள் இரத்த ஓட்டத்தை அதிகரித்து இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இதன் சுவை காரமாக இருந்தாலும் இது இதய வலிப்பு ஏற்படும் வாய்ப்புகளைக் தடுக்கிறது.
4. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களைக் கொண்ட உணவுகள்
இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் இரத்தத்தை இலேசாக்குவதில் மிகுந்த பங்காற்றுகின்றன. இது நரம்புகள் மற்றும் இதய நாளங்களில் இரத்த ஓட்டம் சீராகவும் இரத்தக்கட்டுகளின்றியும் இலகுவாக பாய உதவுகிறது.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இரத்தத்தில் கொழுப்பு சேருவதை தவிர்த்து இரத்தக்கட்டுகள் ஏற்படாமல் செய்கின்றன. பூசணி விதைகள், சால்மன் மீன், வால்நட், மத்தி மீன், ஹெரிங் மீன்கள், ஆலிவ் எண்ணெய் மற்றும் ஆளி விதைகள் ஆகியவற்றை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
5. ஆலிவ் எண்ணெய்
எண்ணெய்களின் தாய் என்றழைக்கப்படும் ஆலிவ் எண்ணெய் இரத்தக் கட்டுகளை எளிதில் குணமாக்கவல்லது. இதில் நிறைந்துள்ள சத்துகள் இரத்த ஓட்டத்தினை அதிகரித்து நரம்பு மற்றும் நாளங்களில் இரத்தக் கட்டுகள் ஏற்படாமல் தடுக்கிறது. இது உடல் பாகங்களை தங்கு தடையின்றி செயல்படவைத்து பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை செய்கின்றன. இதில் உள்ள இரணங்களை ஆற்றும் தன்மை இரத்தத்தை இலேசாக்க உதவுகிறது.
6. பூண்டு
உணவு எதுவானாலும் கொஞ்சம் பூண்டு சேர்க்காமல் செய்ய உங்களுக்கு மனது வராது இல்லையா? பூண்டு சிறந்த சுவைக்கு பெயர்போனது என்பதால் இந்தியாவின் பெரும்பாலான உணவுகளில் இது சேர்க்கப்படுகிறது. சுவையைத் தவிர இது இரத்தத்தை இலேசாக்கும் தன்மைக்கும் கூட பெயர்போனது.
பூண்டு உடலில் கட்டுப்பாடற்ற உயிரிச் செயல்களை (பிரீரேடிகல்ஸ்) கொன்று செல்களுக்கு ஏற்படும் சேதத்தை தவிர்க்க உதவுகிறது. இரத்தத்தில் ரத்தத்தட்டுக்களின் எண்ணிக்கையை உயர்த்தவும் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் இது உதவுகிறது. இது தவிர இரத்தத்தை இலகுவாக்கி இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்த உதவுகிறது.