மூட்டு வலியை ஏற்படுத்தும் கால்சியம் குறைபாட்டை முற்றிலும் நிவர்த்தி செய்ய வழிகள்!

0

மூட்டு வலியை ஏற்படுத்தும் கால்சியம் குறைபாட்டை முற்றிலும் நிவர்த்தி செய்ய வழிகள்.

கால்சியம் சத்து உடலில் குறைவாக இருந்தால், எலும்புகள் ஆரோக்கியமின்றி இருப்பதோடு, ரத்த செல்கள் உருவாவதிலும் பிரச்சனைகள் ஏற்படும். உடலில் கால்சியம் சத்து மிகவும் குறைவாக இருந்தால் மூட்டு வலி ஏற்படுகிறது.பொதுவாக கால்சியம் குறைபாடானது, ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகம் ஏற்படும். மாதவிடாய் காரணமாக, பெரும்பாலான கால்சியம் உடலில் இருந்து வெளியேறிவிடும். எனவே ஆண்களை விட பெண்கள், கால்சியம் உணவுகளை சாப்பிடுவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

பால்
பாலில் கால்சியம் அதிகம் நிறைந்தது. அதிலும் பெண்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் புரோட்டீன் பொடியை சேர்த்து குடித்தால், ஒரு நாளுக்கு தேவையான கால்சியம் சத்தை பெறலாம்.

கடல் சிப்பி
பொதுவாக கடல் உணவுகளிலும் கால்சியம் ஆக்சலேட் என்னும் பொருள் உள்ளது.ஆனால் இதனை ஆண்கள் அதிக அளவில் சாப்பிட்டால், அவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் வந்துவிடும். பெண்கள் இதை சாப்பிட்டால், அதிகப்படியான கால்சியத்தை பெறலாம்.

மத்தி மீன்
மீன்களில் மத்தி மீன் மிகவும் சத்தானது. அத்தகைய மீன், 33 சதவீதம் கால்சியம் சத்தை தருகிறது. எனவே வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால், நல்லது.

சீஸ் மற்றும் அத்திப்பழம்
பால் பொருட்களில் ஒன்றான சீஸ், பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் சீஸிலும் கால்சியம் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது.

அத்திப்பழம் இரண்டு வகையான முக்கியமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் பெண்களுக்கு தேவையான முக்கியமான சத்துக்கள் உள்ளது. அது கால்சியம் மற்றும் இரும்புச்சத்து. எனவே இதனை தினமும், 2-3 துண்டுகள் சாப்பிட்டு வருவது நல்லது.

பச்சை இலைக்காய்கறிகள்
பால் பொருட்களைத் தவிர, கால்சியம் சத்தானது பச்சை இலைக் காய்கறிகளில் நிறைந்துள்ளது. அதிலும் பசலைக் கீரை, ப்ராக்கோலி போன்றவற்றை அளவுக்கு அதிமான அளவில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது.

தயிர்
பால் பிடிக்காதவர்கள், தயிரை சாப்பிடலாம். தயிரிலும், பாலில் உள்ள கால்சியத்தின் அளவு உள்ளது.

பாதாம்
பாதாமில் விட்டமின் ஈ சத்து மட்டுமின்றி, 70- 80 சதவீத கால்சியம் நிறைந்துள்ளது. எனவே தினமும் ஒரு கையளவு பாதாமை சாப்பிட்டு, உடலில் கால்சியத்தை அதிகரியுங்கள்.

இறால்
இறாலில் கால்சியம் அதிகம் உள்ளது. அளவுக்கு அதிகமாக வேக வைத்தால், அதில் உள்ள கால்சியம் போய்விடும். எனவே அளவுக்கு அதிகமாக வேக வைத்துவிடாமல் சாப்பிட வேண்டும்.பற்கள் பிரச்சனை இருப்பவர்கள் இதனை சாப்பிட்டால் பற்கள் வலிமையாகும்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநரைமுடியை கருகருவென மாற்றும் கரும்பூலா அரிய வகை மூலிகை எண்ணெய்!
Next articleஎண்ணில் அடங்காத நோய்களை குணப்படுத்த சூடா வெந்தய நீர்!