இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்காக எட்டு பேர் கொண்ட குழுவொன்று நேற்று(5) நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பதவில் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், மின்சார சபை மறுசீரமைப்புக்கான பரிந்துரைகளை ஒரு மாதத்திற்குள் முன்மொழியுமாறு இந்த குழுவிற்கு பணிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
இந்த குழுவில், நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் எம்.எம்.சி பெர்டினாண்டோ மற்றும் இலங்கை மின்சார சபையின் முன்னாள் ஏ.ஜி.எம் டொக்டர் சுசந்த பெரேரா உள்ளிட்ட அதிகாரிகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் பொருத்தமான நிறுவனங்களை மதிப்பிடுவதற்கான குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கு மேலதிகமாக இலங்கையின் பெற்றோலிய தொழிற்துறையில் பல நிறுவனங்கள் ஈடுபட முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.