மரண தண்டனை விதிக்கப்பட்டு வெலிகடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு போதைப் பொருள் வியாபாரிகளை தூக்கிலிடுவது சம்பந்தமான உத்தரவில் தான் கையெழுத்திட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கூறியிருந்தார்.
எவ்வாறாயினும் அடுத்த வாரத்திற்குள் மரண தண்டனை அமுல்ப்படுத்தப்பட மாட்டாது என சிறைச்சாலைகள் ஆணையாளர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ள உத்தரவு இன்று சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு கிடைக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி தூக்கிலிடும் உத்தரவில் உள்ள நான்கு கைதிகளில் இரண்டு பேர் சிங்களவர்கள் எனவும் மற்றைய இருவர் தமிழர் மற்றும் முஸ்லிம் எனவும் உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.சட்டமா அதிபர் ஜனாதிபதிக்கு அனுப்பிய 20 மரண தண்டனை கைதிகள் அடங்கிய பட்டியலில் நான்கு பேருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றும் உத்தரவிலேயே ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார்.இவர்கள் அனைவரும் போதைப் பொருள் சம்பந்தமான வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் எனக் கூறப்படுகிறது.
எம்.கே. பியதிலக்க, எம்.தர்மகரன்,எச்.எஸ்.எம்.மஸ்தார்,ஜே.ஏ. பூட்பீ.ஜீ., போல்சிங்,எஸ். புண்ணியமூர்த்தி,எம்.கே. சமிந்த,எஸ். கணேசன், டப்ளியூ. விநாயகமூர்த்தி எஸ்.ஏ. சுரேஷ் குமார், எம். குமார்.எஸ். மஷார் டப்ளியூ. ஏ. ரங்க சம்பத் பொன்சேகா, எஸ். முஹமத் ஜான், பெருமாள் கணேசன்,ஆர்.பி. சுனில் கருணாரத்ன, செய்யத் மொஹமட், உவைஸ் எம்.எஸ்.எம். மிஸ்வர்பீ., கெம்பலஸ் பிள்ளை, பவுசுல் ஹமீட், ஹஜ்முல் நியாஸ் ஆகியோரே அந்த 20 மரண தண்டனை கைதிகள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.