Home Jaffna News தற்போது பாடசாலைகளில் படிக்கும் மாணவர்களுக்கு முக்கிய செய்தி! பாடசாலை நேரத்தில் வருகின்றது மாற்றம்!

தற்போது பாடசாலைகளில் படிக்கும் மாணவர்களுக்கு முக்கிய செய்தி! பாடசாலை நேரத்தில் வருகின்றது மாற்றம்!

0
488

தென் மாகாண சபைக்கு உட்பட்ட அரச பாடசாலைகள் எதிர்வரும் திங்கள் முதல் பிற்பகல் 2.30 மணி வரை செயற்பட வேண்டும் என தென்மாகாண ஆளுநர் காரியாலயத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று நண்பகல் 12.30 மணியளவில் தென் மாகாண ஆளுநர் அலுவலகத்திலிருந்து தொலைபேசி மூலம் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இதற்கான காரணம் இதுவரையில் அறிவிக்கப்படவில்லையெனவும் கூறப்படுகின்றது.தென் மாகாணத்திலுள்ள தேசிய பாடசாலைகளுக்கு இந்தச் சட்டம் அமுல்படுத்தப்படாது எனவும் கூறப்படுகின்றது.

அப்பாடசாலைகள் வழமை போன்று 1.30 மணிக்கு விடப்படும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.இந்த அறிவித்தலினால் பல தரப்பினரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது, தென்மாகாண பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை சேவையிலுள்ள பஸ் சாரதிகள் ஆகியோர் இது குறித்து விசனம் தெரிவித்துள்ளனர்.

Previous articleபிக்பாஸ் வீட்டில் நடக்கும் கூத்தை பார்த்து குழம்பி போன பார்வையாளர்கள்! கடும் சோகத்தில் லொஸ்லியா ஆர்மி!
Next articleமரண தண்டனை விதிக்கப்பட்டு தூக்கிலிடப்படுவோர் விபரம் வெளியானது! பெரும் அதிர்ச்சியில் கைதிகள்!