பெண்கள் கார் ஓட்டுவதற்கு சவுதி அரசு அனுமதி வழங்கியது.
சவுதி அரேபியா நாட்டில் பெண்கள் கார் ஓட்ட அனுமதியில்லாத நிலையில் அங்குள்ள பெண்கள் கடந்த 1900ஆம் ஆண்டில் இருந்து இந்த உரிமைக்காக போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தற்போது சவுதி அரேபிய அரசு பெண்கள் கார் ஓட்ட அனுமதி கொடுத்துள்ளது
பழமையான மதகுருமார்களை சம்மதிக்க வைத்து சவுதி அரேபியா எடுத்த இந்த முயற்சிக்கு உலக நாடுகள் பாராட்டு தெரிவித்துள்ளன. குறிப்பாக அமெரிக்க அரசு சவுதி அரேபியாவை பாராட்டியுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு தான் சவுதி அரேபியாவில் பெண்கள் தேர்தலில் வாக்களிக்கவும் போட்டியிடவும் அனுமதி கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: