கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சுஜா வருணி. பல விளம்பர படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸில் பங்குபெற்ற பிறகுதான் தன்னை யார் என்று அடையாளம் காட்டிக்கொண்டார்.
இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், ராம் குமாரின் மகனுமான சிவகுமாரை பல ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் சுஜா வருணிக்கு நேற்று சீமந்தம் நடைபெற்றுள்ளது.
இதுகுறித்த புகைப்படங்களை நடிகை சுஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் சுஜாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: