தினமும் சாமி கும்பிடுறீங்களா! அப்போ இந்த 10 விஷயத்தை மறக்காம மனசுல வெச்சுக்கோங்க!

0

கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுகிறோம். வீட்டிலும் பூஜைகள் செய்து வழிபடுகிறோம். ஆனால் இவை எல்லாவற்றையும் முறையாகத் தான் செய்கிறோமா? சில விதிமுறைகள் இருக்கின்றன. உங்களுக்கு தெரியாத சில ஆன்மிக குறிப்புகளை டாப் தமிழ் நியூஸ் வாசகர்களுக்காக சொல்கிறோம்.

1. காயத்ரி மந்திரத்தை பயணத்தின்போது, சொல்லக் கூடாது. சுத்தமான இடத்தில் தான் காயத்ரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.

2. கற்பூரம் ஏற்றி கடவுளுக்கு காட்டும் பொழுது, இறைவனின் காலிற்கு நான்கு தடவை சுற்றிக் காண்பிக்க வேண்டும். தொப்புளுக்கு இரண்டு தடவை சுற்றிக் காண்பிக்கவேண்டும். முகத்துக்கு ஒரு தடவையும், முழு உருவத்துக்கும் மூன்று தடவையும் காண்பித்து வழிபட வேண்டும்.

3. நமது வீட்டு வாசலில் கோலம் போடாமலும், வீட்டில் விளக்கேற்றாமலும் அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் செல்லக் கூடாது. அப்படிச் செல்வதால் பலன்கள் கிடையாது.

4. விளக்கு எரிந்துக் கொண்டிருக்கும் பொழுது, அதில் இருக்கும் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.

5. சிவன் அர்ச்சனைக்கு உகந்தது வில்வ இலை. விஷ்ணுவிற்கு உகந்தது துளசி. விநாயகர் வழிபாட்டிற்கு உகந்தது அருகம்புல். அதே போல் பிரம்மாவிற்கு உகந்தது அத்தி இ்லை. இவற்றை மாற்றி, மற்ற தெய்வங்களுக்கு வைத்து வழிபடக் கூடாது.

6. கலச பூஜை செய்கிறோம். கலசத்தின் அா்த்தங்கள் தெரியுமா? கலசத்தை தான் சரீரம் என்கிறோம். கலசத்தின் மேல் சுற்றியிருக்கும் நூல் தான் நம் உடம்பில் இருக்கும் நாடி, நரம்புகள். கலசத்தின் உள்ளே இருக்கும் தீா்த்தம் தான் இரத்தம். கலசத்தின் மேல் உள்ள தேங்காய், தலையாக கருதப்படுகிறது. கலசத்தின் மேல் உள்ள தேங்காயைச் சுற்றியிருக்கும் மாவிலையை, சுவாசமாகப் பார்க்கிறோம். கலசத்தின் அடியில் இருக்கும் அரிசியும், இலையும் தான் மூலாதாரம். அதில் இருக்கும் கூர்ச்சம் தான் மூச்சாக கருதப்படுகிறது. உபசாரத்தை பஞ்ச பூதங்களாக வழிபடுகிறோம்.

7. பெண்கள் வேல் மற்றும் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்யகூடாது

8. கோவில்களில் சூடம் மற்றும் தீபத்தை கைகளில் ஏற்றி காண்பிக்க கூடாது.

9. பூஜைக்குப் பயன்படுத்திய தேங்காயை சமையலில் சேர்த்து, பின்னர் அந்த உணவை மீண்டும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

10. அமாவாசை விரதமிருப்பவர்கள் அன்று, வீட்டில் தான் சாப்பிடவேண்டும். வெளியே சமைத்ததை சாப்பிடக்கூடாது. முடிந்தால் அமாவாசை அன்று பசியுடன் இருப்பவர்களுக்கு உணவு தரலாம். அமாவாசை தினங்களில் வீட்டு வாசலில் கோலம் போடக் கூடாது

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநிறைமாத கர்ப்பினியாக இருக்கும் பிக்பாஸ் சுஜாவிற்கு சீமந்தம் முடிந்துவிட்டது! வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்!
Next articleஎண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலிற்கு முன்னர் என்ன நடந்தது! புதிய தகவல்!