நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க விரும்புகிறீர்களா! அப்ப இத படிங்க!

0

தினமும் நீங்கள் புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க விரும்புகிறீர்களா? அப்படியெனில் அதற்கு தினமும் காலையில் ஒருசில செயல்களை தவறாமல் பின்பற்றினாலே போதும். இந்த செயல்கள் ஒவ்வொன்றும், உடல் ஆரோக்கியத்துடனும், மன நலத்துடனும் தொடர்புடையவை. சரி, இப்போது 5 நிமிடத்தில் உடல், மனம் மற்றும் உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்த தினமும் காலையில் பின்பற்ற வேண்டிய செயல்கள் குறித்து காண்போம்.

அதிகாலையில் வேகமாக எழவும்
தினமும் காலையில் வேகமாக எழுந்துவிட்டால், எவ்வித அவசரமும் இல்லாமல் அனைத்து செயல்களையும் செய்யலாம். தாமதமாக எழுந்தால், அன்றைய தினம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலும் தாமதமாகவே நடைபெறும். இதனால் டென்சன் மற்றும் பதற்றம் தான் அதிகரிக்கும்.

உடற்பயிற்சி
காலையில் வேகமாக எழுந்ததும், சிறிது நேரம் உடற்பயிற்சியில் ஈடுபட்டால், உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.

தியானம்
காலையில் எழுந்ததும் சிறிது நேரம் தியானத்தில் ஈடுபடுவதன் மூலம் மனம் அமைதியுடன் இருப்பதோடு, தெளிவாகவும் இருக்கும். இதனால் அன்றைய நாளில் எந்த ஒரு பிரச்சனைக்கும் விரைவில் தீர்வு காண முடியும்.

ஸ்ட்ரெட்ச்
தூங்கிக் கொண்டே இருந்தால், உடலில் அலுப்பு அதிகம் தான் இருக்கும். ஆனால் காலையில் சிறிது நேரம் ஸ்ட்ரெட்ச்சிங் செய்து வந்தால், தசைகள் நன்கு விரிவடைவதுடன், மன அழுத்தமும் குறைந்து, இரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.

எலுமிச்சை ஜூஸ்
காலையில் ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸ் குடிப்பதன் மூலம், செரிமான பிரச்சனைகள் நீங்கும், குடல் சுத்தமாகும், உடலில் ஆற்றல் பெருகும்.

இரும்புச்சத்துள்ள காலை உணவுகள்
காலை உணவு என்பது ஒரு நாளில் மிகவும் முக்கியமான உணவு. அதிலும் காலை உணவில் இரும்புச்சத்துக்கள் அதிகம் இருந்தால், உடலில் ஆற்றல் அதிகமாக இருக்கும். இரும்புச்சத்து ஒருவரது உடலில் குறைவாக இருந்தால் தான் சோம்பேறித்தனத்துடன் இருப்போம்.

ஆகவே முட்டை, வேர்க்கடலை வெண்ணெய், பீன்ஸ், பச்சை இலைக் காய்கறிகள் போன்றவற்றுடன், ஆரஞ்சு, எலுமிச்சை ஜூஸ் போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகளையும் உட்கொண்டால், உடலால் எளிதில் இரும்புச்சத்தை உறிஞ்ச முடியும்.

வார இறுதி நாட்களில் அதிக தூக்கம் வேண்டாம்
சனி, ஞாயிறு தினங்களில் விடுமுறை என்பதால், பலரும் இந்நாட்களில் நீண்ட நேரம் தூக்கத்தை மேற்கொள்வார்கள். ஆனால் இப்படி வாரத்தில் 2 நாட்களில் நீண்ட நேரம் தூங்கினால், பின் திங்கட்கிழமை வரும் போது மிகுந்த சோம்பேறித்தனத்துடன், டென்சனாகவும் இருக்கக்கூடும். ஆகவே அனைத்து நாட்களும் ஒரே அளவிலான தூக்கத்தை மேற்கொள்ளுங்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஏன் கிராமங்களில் கம்பங் கஞ்சி குடிக்கிறார்கள் என தெரியுமா!
Next articleதிருமணமான 6 நாளில் மனைவியை காண வந்த நபர்! அப்போது கணவர் கண்ட காட்சி!