நடைபெறப்போகும் குரு பெயர்ச்சியால் யார் யாருக்கு தன லாபம் கிடைக்கப்போகிறது இந்த 4 ராசிக்கும் அடுத்தடுத்து காத்திருக்கும் அற்புதம்!

0

குரு பார்க்க கோடி புண்ணியம் என்பார்கள். காலச்சக்கரத்திற்கு லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் குரு அமரப்போகிறார். குருவின் பார்வை மிதுனம், சிம்மம், துலாம் ராசிகளின் மீது விழப்போகிறது.

வாக்கிய பஞ்சாங்கப்படி குரு பெயர்ச்சி மங்களகரமான பிலவ ஆண்டு ஐப்பசி மாதம் 27ஆம் தேதி நவம்பர் 13ஆம் நாள் சனிக்கிழமை இரவு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார்.

திருக்கணித பஞ்சாங்கப்படி குரு பகவான் மங்களகரமான பிலவ ஆண்டு கார்த்திகை மாதம் 4ஆம் தேதி நவம்பர் 20ஆம் தேதியன்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். யாருக்கெல்லாம் ராஜயோகம் என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசி நேயர்களே, குரு பகவான் உங்கள் ராசிக்கு9,12 ஆம் அதிபதி. குரு லாப ஸ்தானமான 11ஆம் வீட்டிற்கு வரப்போகிறார். கடந்த வருடத்தில் வேலை தொழில் ரீதியாக சிரமமான சூழ்நிலைகளை சந்தித்தவர்களுக்கு இந்த வருடம் சாதகமாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

புதிய வேலை கிடைக்கும். வேலையில் இட மாற்றங்கள் ஏற்படும். சம்பள உயர்வு கிடைக்கும். தொழில் ரீதியான லாபம் பெருகும். வெளிநாட்டு முயற்சிகள் கைகூடும். வெளிநாட்டில் வசிப்பவருக்கு முன்னேற்றம் ஏற்படும்.

சொந்த ஊரில் வசிப்பவர்களுக்கு முன்னேற்றம் இருந்தாலும் சுப விரையச் செலவுகள் ஏற்படும். குரு பெயர்ச்சியினாலும் குருவின் பார்வையாலும் திருமணம், புத்திரபாக்கியம் உள்ளிட்ட சுப காரியங்கள் நிகழ அதிக வாய்ப்புகள் உள்ளன.

ரிஷபம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே, குரு உங்கள் ராசிக்கு 8 மற்றும் 11ஆம் வீட்டிற்கு உடையவர். 10ஆம் வீடான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.

தொழில் அல்லது வேலையில் மாற்றம் நிகழும். சிலருக்கு தொழில், வியாபாரம், வேலையில் சில சங்கடங்களை சந்திக்க வேண்டியிருக்கும். வேலை செய்யும் இடத்தில் கவனமும் நிதானமும் தேவை.

உயரதிகாரிகளை பகைத்துக்கொள்ள வேண்டாம். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளை சேர்க்க வேண்டாம். 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் குரு அதிசாரமாக லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் போது ஓரளவு பிரச்சினைகளை சமாளிக்கலாம்.

மிதுனம்
புதன்பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே, குரு பகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார்.

அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்ய ஸ்தான இடத்திற்கு செல்லப் போகிறார். 9ஆம் இடம் என்பது தெய்வ வழிபாடுகளையும், ஆலயங்களையும் குறிக்கும். குரு உங்கள் ராசிக்கு களத்திர ஸ்தான அதிபதி, தொழில் ஸ்தான அதிபதி.

குருவின் பார்வையால் உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். இந்த கால கட்டத்தில் வெளிநாட்டு வேலைகளுக்கு முயற்சி செய்தால் இடைபட்ட காலங்களில் வெளிநாட்டு,வெளிமாநில வேலை அமையும் .

ஜோதிடம்,ஆன்மீகத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல தனச்சேர்க்கை உண்டாகும். குரு பெயர்ச்சியின் இறுதி காலகட்டங்களில் அரசு மற்றும் அரசியலில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். தங்க நகைகள் வாங்குவார்கள். நிறைய தொலை தூர தெய்வ வழிபாடுகளைச் செய்வீர்கள்.

கடகம்
சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 6, மற்றும் 9ஆம் வீட்டிற்கு அதிபதி குரு பகவான் எட்டாம் வீட்டிற்கு வரப்போகிறார்.

அஷ்டம குரு என்று அச்சப்பட வேண்டாம். குரு பகவான் உங்களுக்கு அஷ்டம குரு நன்மையே செய்வார். கண்டச்சனி காலம் என்பதால் சில சங்கடங்களை சந்திக்க வேண்டியிருக்கும். வேலை, தொழில் விசயங்களில் அகலக்கால் வைக்க வேண்டாம். அவசரப்பட்டு இருக்கிற வேலையை விட்டு விட வேண்டாம்.

2022 ஆம் ஆண்டு குரு அதிசாரமாக 9ஆம் வீட்டிற்கு பயணிக்கும் காலத்தில் உங்களுடைய பிரச்சினை படிப்படியாக குறைந்து நன்மைகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். சங்கடங்கள் நீங்கி சந்தோஷங்கள் அதிகரிக்கும்.

சிம்மம்
சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே, குரு பகவான் உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி, அஷ்டம ஸ்தான அதிபதியும் ஆவார். குரு களத்திர ஸ்தானமான 7ஆம் வீட்டில் அமர்கிறார். குருவின் பார்வை உங்கள் தொழில் வியாபாரத்தில் அதிக லாபத்தையும் நன்மைகளையும் தரும்.

புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். தொட்டது பொன்னாகும் காலம். இருக்கிற தொழிலை விரிவு செய்யுங்கள் அதே நேரத்தில் புதிய தொழில் முயற்சிகளை தவிர்க்கவும். வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல புரமோசன் கிடைக்கும்.

சிலருக்கு புதிய வேலை கிடைக்கும். சங்கடங்கள் நீங்கி சந்தோஷங்கள் அதிகரிக்கும் காலகட்டமாகும்.

கன்னி
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, குரு பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் பயணம் செய்கிறார்.

கடன்,நோய் சம்பந்தப்பட்ட வகையில் மனஸ்தாபங்களும் பிரச்சினைகளும் நிகழும். புது முதலீடுகள் கூடாது. வேலை முயற்சிகளிலும் பலவீனம் ஏற்படும். பங்குச் சந்தை முதலீடுகள் பலன் தராது.

கடன் கொடுத்தால் திரும்பி வருவது கடினம். குரு பெயர்ச்சியின் முற்பகுதியில் பாதிப்புகள் ஏற்பட்டாலும் அதிசாரமாக குரு பயணிக்கும் காலத்தில் நன்மையே ஏற்படும்.

வேலை தொழில் ரீதியான விசயங்களில் முன்னேற்றம் நிகழும். கடன் எதிரி தொந்தரவு கட்டுக்குள் இருக்கும். புதிய முதலீடுகளுக்காக வங்கிக் கடன் வாங்கலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபிரதமர் தோற்றத்தில் வாகனத்தில் வந்திறங்கிய நபர்: விரட்டியடித்த பொது மக்கள்
Next articleஇன்றைய ராசி பலன் 20.10.2021 Today Rasi Palan 20-10-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!